Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பித்தார் தினேஷ் கார்த்திக்.. ரிஷப்பண்ட் குறித்து அதிரடி முடிவு..டி20 உலகக்கோப்பை அணியில் ட்விஸ்ட்

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவை எடுத்துள்ளது.

நடப்பாண்டுகான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகளில் பிசிசிஐ இன்று களமிறங்கியது.

 இந்திய அணி

இந்திய அணி

அதன்படி நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மற்றும் வேகப்பந்துவீச்சில் பெரும் குழப்பங்கள் இருந்தன. எனவே அதனை திருத்திக்கொள்ளும் வகையில் முன்கூட்டியே சரியான முடிவுகளுடன் செல்ல அதிகாரிகள் தீர்மானித்தனர்.

முக்கிய பிரச்சினை

முக்கிய பிரச்சினை

அந்தவகையில் மிகமுக்கியமான பிரச்சினை ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் தான். இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்ற குழப்பம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற போது தினேஷ் கார்த்திக் அணியில் இருந்தும் பேட்டிங் செய்யும் சூழல் ஏற்படவில்லை. ரிஷப் பண்ட் அழுத்தமான சூழல்களில் சொதப்புவதால் இந்தியாவின் ஸ்கோர் பாதிக்கப்பட்டது.

தினேஷ்-க்கு பச்சைக்கொடி

தினேஷ்-க்கு பச்சைக்கொடி

இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு தற்போதே பிசிசிஐ முடிவு கட்டியுள்ளது. அதாவது முக்கியமான போட்டிகள் அனைத்திலும் தினேஷ் கார்த்திக் உடன் செல்வதற்கே அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். சிறிய அணிகளுடனான மோதல் அல்லது ரிஸ்க் இல்லாத போட்டிகளில் மட்டும் ரிஷப் பண்ட்-ஐ களமிறக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

ஆஸ்திரேலிய களத்தில் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ள தினேஷ் கார்த்திக், சிக்கலான நேரத்தில் அணியை மீட்டெடுப்பார். இதே போன்று துபாயில் இருந்ததை போல இடதுகை பேட்ஸ்மேன் என்ற பிரச்சினையை எதிர்கொள்ளவும், இந்த முறை சரியான திட்டத்துடன் டிராவிட் செல்லவுள்ளார். இந்த காரணத்திற்காக தான் மீண்டும் பிசிசிஐ துணிந்து பண்ட்- மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையுமே எடுத்துள்ளது.

Story first published: Monday, September 12, 2022, 18:27 [IST]
Other articles published on Sep 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+