For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி மாற்றம் கன்ஃபார்ம்.. இலங்கை தொடரில் பிசிசிஐ அதிரடி முடிவு.. 2 ஸ்டார்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சி

மும்பை: இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியில் ரிஷப் பண்ட், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகியோரை வைத்து அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளது பிசிசிஐ.

இந்திய அணி தற்போது வங்கதேச அணியுடனான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களை முடித்துள்ளது. இதனையடுத்து இலங்கையுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

2023ம் ஆண்டின் முதல் தொடராக, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது.

 இலங்கை தொடர்

இலங்கை தொடர்

இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமலேயே உள்ளது. புதிய தேர்வுக்குழு இன்னும் நியமிக்கப்படாததால், சேட்டன் சர்மா தலைமையிலான குழுவை தேர்வு செய்வதற்காக வரவைக்கவுள்ளனர். இதனையடுத்து இந்திய அணியை அறிவிப்பதற்கான முதற்கட்ட ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

இந்நிலையில் பிசிசிஐ ஒரு அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளது. அதாவது விக்கெட் ரிஷப் பண்ட்-ஐ அணியில் இருந்து நீக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு இது ஓய்வு கிடையாது. மாறாக அவர் ஃபார்மில் இல்லாத காரணத்தால் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் என ஃபார்மில் உள்ள வீரர்களுக்கு வழிவிடவுள்ளார்.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

இந்தாண்டில் ரிஷப் பண்ட் இதுவரை 21 இன்னிங்ஸ்களில் ஆடி 364 ரன்களை தான் அடித்துள்ளார். அதிலும் ஒரே ஒரு அரைசதம் மட்டும் தான். மறுபுறம் சஞ்சு சாம்சன் 5 இன்னிங்ஸ்களில் ஆடி 179 ரன்களுடன் ஒரு அரைசதத்தையும் அடித்துள்ளார். இதே போல இளம் வீரர் இஷான் கிஷானும் 16 இன்னிங்ஸ்களில் 476 ரன்களுடன் 3 அரைசதத்தை அடித்துள்ளார். இதனால் தான் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கவுள்ளதாக தெரிகிறது.

உலகக்கோப்பை ப்ளான்

உலகக்கோப்பை ப்ளான்

50 ஓவர் உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதே போல 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைகாக ஹர்திக் பாண்ட்யா தலைமையில் படையை உருவாக்கி வருகின்றனர். எனவே இந்தியாவின் எதிர்கால திட்டத்திற்கான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இதற்கான முதற்கட்ட முடிவு தான் இந்த இலங்கை தொடர்.

Story first published: Monday, December 26, 2022, 18:34 [IST]
Other articles published on Dec 26, 2022
English summary
BCCI takes a Important decision over rishabh pant, sanju samson place for srilanka series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+