Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி சீனியர்களுக்கு வாய்ப்பே இல்லை.. நியூசி, தொடரில் பிசிசிஐ தடாலடி முடிவு.. ரோகித், கோலி நிலை என்ன?

மும்பை: நியூசிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் குறித்து பிசிசிஐ எடுத்துள்ள முடிவு, இந்திய அணிக்குள் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. பல்வேறு முன்னணி வீரர்களும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது இலங்கை அணியுடனான தொடரில் மோதி வருகிறது. இரு அணிகளும் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. அதுவும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் படை வெற்றி கண்டு அசத்தியுள்ளது.

 சீனியர்கள் புறகணிப்பு

சீனியர்கள் புறகணிப்பு

இந்த தொடருக்கான டி20 தொடரில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், அஸ்வின் உள்ளிட்ட பல சீனியர் வீரர்கள் புறகணிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது என அனைவரும் நினைத்த சூழலில் இனி அவர்களுக்கு வாய்ப்பே கிடையாது என்பது போல பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. அதற்கு உதாரணம் நியூசிலாந்து தொடர் தான்.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

இம்மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு குறித்த ஆலோசனை தற்போது சூடுபிடித்துள்ளது. டி20 தொடருக்கு மீண்டும் ஹர்திக் தலைமையிலான இளம் வீரர்களே களமிறங்குவார்கள் என்றும், ரோகித், கோலி உள்ளிட்டோர் மீண்டும் வாய்ப்பு பெறமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

எதிகாலத்தின் திட்டம்

எதிகாலத்தின் திட்டம்

இந்திய அணியின் 3 வடிவ கேப்டனும் ரோகித் தான் என சமீபத்தில் பிசிசிஐ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் வருகிறது. எனவே சீனியர்களை அதற்கு மட்டுமே தயார்படுத்தவுள்ளதாக தெரிகிறது. மேலும் 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து, இனி இளம் வீரர்களை தயார்படுத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

தொடரின் அட்டவணை

தொடரின் அட்டவணை

இலங்கை தொடர் வரும் ஜனவரி 15ம் தேதியன்று முடிவடைகிறது. இதன்பின்னர் நியூசிலாந்து தொடர் வரும் ஜனவரி 18ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பெரும்பாலும் இலங்கை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் தான் நியூசிலாந்து தொடருக்கும் தேர்வாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, January 5, 2023, 19:38 [IST]
Other articles published on Jan 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+