For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பதா??.. பிசிசிஐ எடுத்துவரும் கேப்டன்சி முடிவுகள்.. ரசிகர்கள் கொந்தளிப்பு!

மும்பை: இந்திய அணியின் கேப்டன்சியில் பிசிசிஐ விளையாடி வருவதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Recommended Video

IND vs ENG 5th Test: Bumrah செய்த Captaincy Mistakes | Aanee's Appeal | *Cricket

இந்திய அணி தற்போது இங்கிலாந்து தொடரில் பங்கேற்றுள்ளது. டெஸ்ட் தொடர் சமனில் முடிவடைந்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டி உள்ளது.

மோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா மோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

இந்திய அணி தொடர்

இந்திய அணி தொடர்

இதன் பின்னர் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மாவே கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக வரக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக ஷிகர் தவானை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிசிசிஐ-ன் முடிவு

பிசிசிஐ-ன் முடிவு

2022ம் ஆண்டு இந்திய அணியை வழிநடத்தப்போகும் 8வது கேப்டன் ஷிகர் தவான் ஆகும். விராட் கோலி இருந்தவரை பெரும்பாலான போட்டிகளுக்கு அவர் மட்டுமே கேப்டனாக செயல்பட்ட சூழலில், ரோகித் கேப்டனான பிறகு தொடர்ச்சியாக ஓய்வு, காயம் என்ற காரணத்தால் கேப்டன்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

கேப்டன்சி பட்டியல்

கேப்டன்சி பட்டியல்

விராட் கோலி - தென்னாப்பிரிக்க டெஸ்ட்

கே.எல்.ராகுல் - தென்னாப்பிரிக்க ODI

ரோகித் சர்மா - இலங்கை & வெஸ்ட் இண்டீஸ்

ரிஷப் பண்ட் - தென்னாப்பிரிக்க டி20

ஹர்திக் பாண்ட்யா - அயர்லாந்து டி20

ஜஸ்பிரித் பும்ரா - இங்கிலாந்து டெஸ்ட்

தினேஷ் கார்த்திக் - இங்கிலாந்து 2 பயிற்சி டி20

ஷிகர் தவான் - வெஸ்ட் இண்டீஸ் ODI

 எச்சரிக்கும் வல்லுநர்கள்

எச்சரிக்கும் வல்லுநர்கள்

இந்தியாவின் 3 வடிவ அணிக்கும் நிரந்தர கேப்டனான ரோகித் சர்மாவுக்கு 35 வயதாகிவிட்டது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் வேறு ஒரு புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இப்படி இருக்கையில் கேப்டன்சிக்காக ஒருத்தரை நியமித்து வளர்த்து விடுவதை தவிர்த்து, புது புது கேப்டன்களை நியமிப்பது இந்திய அணிக்கு ஆபத்தாக அமையும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, July 6, 2022, 19:40 [IST]
Other articles published on Jul 6, 2022
English summary
India squad for West indies tour ( வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ) இந்திய அணியின் கேப்டன்சி விவகாரத்தில் பிசிசிஐ பெரும் ரிஸ்க் எடுத்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X