For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தகவல் அறியும் சட்டத்தில் சிக்கிய பிசிசிஐ.. இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது

மும்பை : தகவல் அறியும் சட்டம் இந்தியாவில் அறிமுகமான காலத்தில் இருந்து பிசிசிஐ அந்த சட்ட வரம்புக்குள் வராமல் வம்பு செய்து கொண்டு இருந்தது.

என்னென்ன செய்ய வேண்டுமோ எல்லாம் செய்து, தகவல் அறியும் சட்டத்துக்குள் செல்லாமல் பிசிசிஐ-ஐ காத்து வந்தார்கள் அதன் அதிகாரிகள். உள்ளே ஆயிரம் அரசியல் இருந்தாலும், அனைவரும் இந்த விஷயத்தில் மட்டும் கவனமாக இருந்தனர்.

எனினும், கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாக கமிட்டியின் கீழ் குறைந்த அதிகாரத்தோடு இயங்கி வரும் பிசிசிஐ, தகவல் அறியும் சட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பெட்டிப் பாம்பாக அடங்கியது

பெட்டிப் பாம்பாக அடங்கியது

மத்திய தகவல் கமிஷன் அமைப்பு தற்போது இதை உறுதி செய்துள்ளது. பிசிசிஐ தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் வராமல் இருக்கிறது என பல புகார்கள் நீண்ட காலமாக இருக்கின்றன. யாராவது இது தொடர்பாக வழக்கு போட்டால், பிசிசிஐ தன் பண பலத்தை வைத்து நாட்டின் சிறந்த வக்கீலை வைத்து வாதாடும். எனினும், இப்போது உச்ச நீதிமன்றம் அமைத்த கமிட்டியின் கீழ் இயங்குவதால் பெட்டிப் பாம்பாக அடங்கி உள்ளது பிசிசிஐ.

12 கேள்விகளுக்கு பதில் இல்லை

12 கேள்விகளுக்கு பதில் இல்லை

கீதா ராணி என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிசிசிஐ தொடர்பான 12 கேள்விகளை விளையாட்டு அமைச்சகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்க முடியாத விளையாட்டு அமைச்சகம், அதை மத்திய தகவல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளது.

பதில் சொல்லாத பிசிசிஐ

பதில் சொல்லாத பிசிசிஐ

மத்திய தகவல் கமிஷன் பிசிசிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு பிசிசிஐ எந்த பதிலும் அளிக்கவில்லை. பதில் அளிக்க அதிக நேரம் வேண்டும் என கேட்டதற்கு மறுத்து விட்டது கமிஷன். இதை அடுத்து பிசிசிஐ உடனடியாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரவேண்டும் என கூறியுள்ளது அந்த கமிஷன்.

இனி ஒளிய முடியாது

இனி ஒளிய முடியாது

இப்போது, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இருந்து பிசிசிஐ தப்பிக்க நினைக்கிறது. அதற்கு ஒரே வழி உயர் நீதிமன்றம் தான். ஒருவேளை அங்கே வென்றாலும், எதிர் தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றால் அங்கேயும் சென்று போராட வேண்டும். வழக்கு நடக்கும் காலத்தில் பிசிசிஐ தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு கீழே வராமல் இருக்க முடியுமா? என்பதும் சந்தேகமே. சில நாட்கள் மட்டுமே பிசிசிஐ இந்த சட்டத்துக்குள் வந்தால் போதும், ஆயிரக்கணக்கான கேள்விக் கணைகள் தாக்கி விடும். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு வீரரை அணியில் ஏன் எடுக்கவில்லை என்பதையும் பொதுமக்களால் கேட்க முடியும். இனி பிசிசிஐ பாடு திண்டாட்டம் தான்.

Story first published: Tuesday, October 2, 2018, 14:23 [IST]
Other articles published on Oct 2, 2018
English summary
BCCI under RTI. Officials want to challenge CIC verdict at court. Things getting complicated for BCCI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X