Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரசியலில் குதிக்க போகும் தோனி.. காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா சொன்னதை கவனிச்சீங்களா?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரமான தோனி தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் மட்டும் தோனி வீரராக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பிறகு இந்தியாவில் மிகவும் பிரபலமான மனிதர் என்றால், அது தோனி தான் என்று பல ஆய்வு முடிவுகள் கூறியிருக்கிறது. இதனால் தோனியை வளைத்து போட பல கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.

india cricket team ms dhoni politics bjp

கடந்த ஆண்டு ஜார்கண்டில் தேர்தல் நடந்த போது தோனியை எப்படியாவது தங்கள் கட்சியில் சேர்க்க வேண்டுமென பாஜக முயற்சி செய்து தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பிசிசிஐயின் துணை தலைவரும் காங்கிரஸ் எம்பிமான ராஜூவ் சுக்லா, தோனியின் அரசியல் வருகை குறித்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்," தோனி அரசியல்வாதியாக வருவதற்கு அனைத்து தகுதிகளும் சிறப்பாக இருக்கிறது. அவர் அரசியல்வாதியாக நிச்சயம் ஆகலாம். ஆனால் இது குறித்து அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். கங்குலி, பெங்கால் அரசியல் களத்திற்கு வந்தால் அது சிறப்பான ஒரு நகர்வாக இருக்கும்.

அதேபோல் தோனியும் அரசியலுக்கு வந்தால் அவரால் பல சாதனைகள் செய்ய முடியும். மிகவும் பிரபலமான வீரராக இருப்பதால் தோனி நிச்சயம் தேர்தலில் எளிதில் வெற்றி பெறுவார். ஒருமுறை நான் தோனியிடம் கேட்டேன். நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கப் போகிறீர்கள் என்று செய்திகள் வந்ததே அது உண்மையா என்று கேட்டேன்.

அதற்கு, இல்லை,இல்லை அப்படி என்று முடிவும் நான் இன்னும் எடுக்கவில்லை என தோனி கூறியதாக ராஜூவ் சுக்லா சுட்டி காட்டியுள்ள தோனி, இதுவரை எந்த ஒரு அரசியல் கருத்தையும் வெளிப்படையாக கூறியது கிடையாது. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை போது கூட பல கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்த நிலையில் தோனி அது குறித்து பேசவே இல்லை. இந்த சூழலில் தோனி அரசியலுக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக ராஜூவ் சுக்லாவின் பேட்டியின் மூலம் தெளிவாகிறது.

Story first published: Monday, February 3, 2025, 18:19 [IST]
Other articles published on Feb 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+