Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதன் முறையாக பிசிசிஐ "கறார்".. ஒன்னும் சொல்ல முடியாமல்.. "உச்" கொட்டிய கோலி , சாஸ்திரி

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வியால், பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. இதற்கான, இந்திய அணியை தேர்வு செய்வதில், பிசிசிஐ தீவிரமாக உள்ளது.

 தெளிவான முடிவு

தெளிவான முடிவு

ஆனால், இத்தொடருக்கான இந்திய அணியில் எந்த காம்ப்ரமைஸும் இருக்கக் கூடாது என்பதில் பிசிசிஐ மிகத் தெளிவாக உள்ளது. ஏனெனில், ஒரு சாதாரண வழக்கமான டெஸ்ட் தொடரை இந்திய அணி தோற்பதால் ஏற்படும் பாதிப்பை விட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வி, இந்திய அணியின் பெயரை ஏகத்துக்கும் குறைந்துள்ளதாக பிசிசிஐ கருதுகிறது. அது உண்மையும் கூட.

 தோற்ற விதம் ஏமாற்றம்

தோற்ற விதம் ஏமாற்றம்

இப்போட்டியில் இந்திய அணி தோற்றதை விட, தோற்ற விதம் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத் தான் சமீபத்திய அணி ஆலோசனை கூட்டத்தில் விராட் கோலி மற்றும் கோச் ரவி சாஸ்திரியிடம் சற்று காட்டமாகவே தெரிவித்திருக்கிறது பிசிசிஐ தரப்பு. இந்நிலையில், WTC ஃபைனலில் இழந்த பெயரை, மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீட்டு கொண்டு வர வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது.

 முக்கிய வீரர்கள் பங்கேற்பு

முக்கிய வீரர்கள் பங்கேற்பு

இந்த சூழலில் தான், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணித் தேர்வு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீட்டிங்கில் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக சில முக்கிய வீரர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தெரிகிறது. அதில், பேசிய பிசிசிஐ அதிகாரிகள், இங்கிலாந்து தொடருக்கான அணித் தேர்வில், எந்தவித சமரசமும் இருக்கக் கூடாதென்று தெளிவுப்படுத்தி உள்ளனர். சீனியர், ஜுனியர் என்று யாராக இருந்தாலும், நல்ல ஃபார்மில் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

 ஐபிஎல் ஹீரோஸுக்கு வேலையில்லை

ஐபிஎல் ஹீரோஸுக்கு வேலையில்லை

போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, 80 சதவிகிதம் அணியை தேர்வு செய்து விட என்றும் கூறப்பட்டுள்ளதாம். கடைசி நேரத்தில் பிட்ச், ரிப்போர்ட், வானிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒன்றிரண்டு மாற்றங்களை மேற்கொள்ளலாமே ஒழிய, விளையாடும் 11 வீரர்களும் வெற்றியை நோக்கி விளையாடுபவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவை எல்லாவற்றையும் விட, ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்ற காரணத்திற்காக யாருக்காகவும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது (ஜடேஜாவை சொல்றாங்களோ)

Story first published: Friday, July 2, 2021, 21:22 [IST]
Other articles published on Jul 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+