For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி..! டீமை விட்டு போக வேண்டாம்.. கடைசியில் யு டர்ன் போடும் பிசிசிஐ..!! காரணம் இது தான்..!

Recommended Video

BCCI backs Dhoni | கடைசியில் வழிக்கு வந்த பிசிசிஐ..!! காரணம் இது தான்..!- வீடியோ

மும்பை: டி 20 உலக கோப்பை வரை ரிஷப் பண்ட்டை தயார்படுத்த, தோனி அணியில் நீடிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் இந்திய அணி நிர்வாகம் வற்புறுத்த தொடங்கி இருக்கிறது.

உலக கோப்பை அரையிறுதி தோல்வி, இந்திய அணியை புரட்டி போட ஆரம்பித்து இருக்கிறது. தோல்விக்கு பின்னர் அணியில் பல மாற்றங்களை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறது.

அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் காண முடிகிறது. முதலாவதாக, தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு இளம் வீரர்களை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்துள்ளது. அடுத்து கேப்டன் பொறுப்பில் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கேப்டன் தான் கோலி

கேப்டன் தான் கோலி

ஆனால், அது நடக்கவில்லை. விராட் கோலியே கேப்டன் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக அவர் இருக்கிறார்.

தோனியின் ஓய்வு

தோனியின் ஓய்வு

இதற்கு அடுத்த விவகாரம் என்றால்... தோனியின் ஓய்வு பற்றியது தான். அவர் எப்போது ஓய்வு பெறுவார்? இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களில் அவர் இருப்பாரா? என்ற கேள்விகள் தான் இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

2 மாத ஓய்வு

2 மாத ஓய்வு

எதற்கும் அசராமல் மவுனம் காத்து வந்த தோனி, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு செல்லும் வீரர்களை அறிவிக்கும் முன், இந்திய அணியில் இரண்டு மாதங்கள் நான் இருக்கப் போவதில்லை என்றும், ராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்தார். அதனால் 2 மாதத்திற்கு தன்னை அணியில் எடுக்க வேண்டாம் என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்ததால் இத்தொடருக்கு அவரை தேர்வு செய்யவில்லை.

அனுபவம் வாய்ந்தவர்

அனுபவம் வாய்ந்தவர்

தோனியை அடுத்து இந்திய அணியில் அனுபவம் மிக்க விக்கெட் கீப்பர் எவரும் இல்லை என்பது கிரிக்கெட் பற்றி அறிந்த அனைவருக்குமே நன்றாக தெரியும். இருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரிஷப் பன்ட் முதன்மை கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தயாராக வேண்டும்

தயாராக வேண்டும்

டெஸ்ட் போட்டியில் விருதிமான் சஹா இடம் பெற்றாலும், ரிஷப் பன்ட் முதன்மை கீப்பராக இருக்கிறார். இந்நிலையில் பன்ட்டை வரும் டி 20 உலக கோப்பை தொடர் வரை தயார்படுத்த தோனி இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் பிசிசிஐ இடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

தவறுகள் செய்தவர்

தவறுகள் செய்தவர்

தோனி இல்லாத போது ரிஷப் பன்ட் பல தவறுகளை செய்தது அனைவரும் கண்கூடாக அறிந்ததே. டி20 உலக கோப்பை தொடரில் இதுபோன்ற தவறுகளை செய்தால் லீக் போட்டியிலேயே இந்திய அணி வெளியேற நேரிடும்.

பிசிசிஐ வற்புறுத்தல்

பிசிசிஐ வற்புறுத்தல்

ஆதலால் அதுவரை தோனி அணியில் இடம்பெற வேண்டும், அவரை முடிந்தவரை புறக்கணிக்க வேண்டாம் என்று இந்திய அணி நிர்வாகம் பிசிசிஐயிடம் வற்புறுத்தி வருகிறது. பிசிசிஐ இது குறித்து தோனியிடம் ஒருவேளை தெரிவித்தாலும், அவரின் கருத்தும், முடிவும் தான் இறுதியானதாக இருக்கும் என்று சொல்லலாம்.

Story first published: Monday, July 22, 2019, 23:17 [IST]
Other articles published on Jul 22, 2019
English summary
Bcci wants dhoni in team till t 20 world cup series 2020.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+