டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய முத்கல் கமிட்டியிடம் டோணி, சீனிவாசன் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் ஆடியோவை கேட்டு உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மனுத்தாக்கல் செய்துள்ளது.
6வது ஐபிஎல் போட்டிகளின் போது பிக்ஸிங் விவகாரம் வெடித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் நீதிபதி முத்கல் கமிட்டியை அமைத்தது. அந்த கமிட்டி அளித்த விசாரணையை அறிக்கையின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை ஒதுக்கி வைத்தது உச்சநீதிமன்றம்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கேப்டன் டோணி, கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசன், ஐபிஎல் நிர்வாகி சுந்தர் ராமன் ஆகியோர் முத்கல் கமிட்டியிடம் தெரிவித்த ஆடியோவை ஆராய அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீது வெள்ளிக்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.