Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் புதிய "கோச்" ராகுல் டிராவிட்?

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிடை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான இறுதி முடிவும், அறிவிப்பும் செவ்வாய்க்கிழமை வெளியாகும்.

தற்போது ஐபிஎல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் மென்டாராக இருக்கிறார் டிராவிட். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்படுகிறார்

இந்திய அணியின் கேப்டனாக, விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டவர் டிராவிட் தடை செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய பெருமைக்குரியவர். அஜிங்கியா ரஹானே, சஞ்சு சாம்சனை அடையாளம் கண்டு ஊக்குவித்தவர் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் குழு பரிந்துரை

சச்சின் குழு பரிந்துரை

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் குழுதான், டிராவிடை, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக இக்குழுவினர் டிராவிடமும் பேசியுள்ளனர். அவர் விருப்பம் தெரிவித்தால், செவ்வாய்க்கிழமை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் டிராவிடை தலைமைப் பயிற்சியாளராக நியமித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்திய அணியின் சுவர்

இந்திய அணியின் சுவர்

இந்திய அணியின் சுவர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் டிராவிட். விக்கெட் கீப்பராக, 3வது இடத்தில் நிலையாக நின்று ஆடிய வீரராக, கேப்டனாக அசத்தியவர் டிராவிட். இந்த நிலையில் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் அவ்வாறு அவர் நியமிக்கப்படவில்லை.

டைம் கேட்கும் டிராவிட்

டைம் கேட்கும் டிராவிட்

இந்த நிலையில் அவரைத் தேடி தலைமைப் பயிற்சியாளர் பதவி வந்துள்ளது. இதுகுறித்து யோசிக்க வேண்டும் என்று சச்சின் குழுவிடம் கூறியுள்ளாராம் டிராவிட்.

இளைஞர் படை

இளைஞர் படை

தற்போதைய இந்திய அணியில் இளம் ரத்தம் ஓடிக் கொண்டுள்ளது. இந்த அணியை சிறப்பாக வழி நடத்த டிராவிடால் முடியும் என்று கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. குறிப்பாக டெஸ்ட் அணியை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல டிராவிட் மிகவும் உதவியாக இருப்பார் என்பது வாரியத்தின் நம்பிக்கையாகும்.

2019 வரை செயல்படுவார்

2019 வரை செயல்படுவார்

பயிற்சியாளராக டிராவிட் ஒப்புக் கொண்டால் அவருக்கு நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிகிறது. அதாவது 2019 உலகக் கோப்பைத் தொடர் வரை அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.

பிளட்சருக்குப் பிறகு

பிளட்சருக்குப் பிறகு

தற்போது இந்திய அணியில் பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளது. பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் போன பிறகு ரவி சாஸ்திரி வசம் அணி ஒப்படைக்கப்பட்டது. அவரும் கூட இயக்குநர் என்ற பதவியில் இருந்தபடிதான் அணியை வழி நடத்தி வந்தார். இவர் தவிர பந்து வீச்சு, பீல்டிங் உள்ளிட்டவற்றுக்குத் தனியாக பயிற்சியாளர்கள் இருந்தனர்.

சாதனையாளர்

சாதனையாளர்

டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளிலும், 344 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ரன் குவிப்பில் பல சாதனைகளையும் படைத்தவர் ஆவார். டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டாலும் கூட தற்போதுள்ள உதவி பயிற்சியாள்ர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சுக்கு பரத் அருண், பீல்டிங் கோச்சாக ஸ்ரீதர் தொடர்வார்கள் என்று தெரிகிறது.

Story first published: Sunday, April 3, 2016, 13:01 [IST]
Other articles published on Apr 3, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+