Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு வசீம் ஜாபர் விண்ணப்பம்.. ஆனால் பொறுப்பு இந்த வீரருக்கு தான்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வசீம் ஜாஃபர், பிசிசிஐ தேர்வுக்குழுவில் காலியாக உள்ள இடத்திற்கு விண்ணப்பித்துள்ளார். தேர்வுக்குழுத் தலைவராக இருந்த அஜித் அகர்கரின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இந்த காலிப்பணியிடத்திற்கான தேர்வு முறைகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கு மண்டலத்தை சேர்ந்த அகர்கர், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற அடிப்படையில் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 2027 உலகக்கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில், ரோஹித் சர்மாவின் தேர்வு தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அகர்கரின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க பிசிசிஐ முன்வரவில்லை என்று தெரிகிறது.

Wasim Jaffer

இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1944 ரன்கள் குவித்துள்ள வசீம் ஜாஃபர், அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (CAC) நேர்காணலில் பங்கேற்றார். மேற்கு மண்டலத்திலிருந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரமேஷ் பவாரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

IND vs NZ: 21 வயதான அதிரடி விக்கெட் கீப்பருக்கு இந்திய அணியில் வாய்ப்பு

IND vs NZ: 21 வயதான அதிரடி விக்கெட் கீப்பருக்கு இந்திய அணியில் வாய்ப்பு

தற்போது தெற்கு மண்டல தேர்வாளரான பிரக்யான் ஓஜா தற்காலிகத் தேர்வுக்குழுத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஓஜாவையே தலைவராகத் தொடரச் செய்வதற்கு பிசிசிஐ நிர்வாகத்தில் வலுவான ஆதரவு உள்ளது. ஓஜா தலைவராக நீடிக்க வேண்டுமானால், அவரை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாஃபரைத் தேர்வு செய்ய முடியாது என்பதால், ரமேஷ் பவாருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

IND vs NZ: 21 வயதான அதிரடி விக்கெட் கீப்பருக்கு இந்திய அணியில் வாய்ப்பு

Also Read

IND vs NZ: 21 வயதான அதிரடி விக்கெட் கீப்பருக்கு இந்திய அணியில் வாய்ப்பு

ஓய்வுக்குப் பிறகு பல மாநில அணிகள், ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச அணிகளுக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ள ஜாஃபர், தற்போது கிரிக்கெட் வல்லுனராக செயல்பட்டு வருகிறார். தனது யூடியூப் பக்கத்தில் அஜித் அகர்கரின் பதவிக்காலம் குறித்துப் பேசிய அவர், அகர்கரின் பணிகளுக்கு 10-க்கு 7 மதிப்பெண்களை வழங்கினார்."வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி மிகச்சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால், சில வீரர்களைக் கையாண்ட விதம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்" என்றும் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, October 16, 2026, 22:06 [IST]
Other articles published on Oct 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+