Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக 6 வீரர்கள்.. "அவர்" உட்பட பலரை குறி வைத்து தூக்கும் பிசிசிஐ.. அணிக்குள் நடக்கும் அதிரடி!

சிட்னி: இந்திய அணியில் மோசமாக ஆடி வரும் முக்கியமான வீரர்கள் சிலரை அணியில் இருந்து நீக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் டி 20 போட்டிகளில் இந்தியா வென்றது.

ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக ஆடி பெரிய அளவில் அதிர்ச்சி அளித்தது. இந்திய அணியில் இருக்கும் பல நம்பிக்கை நட்சத்திரங்கள் மிக மோசமாக ஆடி சொதப்பி உள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்திய அணியில் மோசமாக ஆடி வரும் முக்கியமான வீரர்கள் சிலரை அணியில் இருந்து நீக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதன்படி முக்கியமான வீரர்களின் லிஸ்ட் ரெடி செய்யப்பட்டு இருக்கிறது. மொத்தமாக அணியின் எதிர்காலத்தை மாற்றும் விதத்தில் பலரை நீக்க உள்ளனர்.

நீக்கம்

நீக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் பிரித்வி ஷா மிக மோசமாக சொதப்பினார். அதேபோல் மயங்க் அகர்வாலும் பார்ம் அவுட் ஆகி திணறி வருகிறார். இன்னொரு பக்கம் மிடில் ஆர்டரில் இறங்க வேண்டிய பண்ட், விஹாரி ஆகியோரும் மோசமாக ஆடி வருகிறார்கள்.

பவுலர்கள்

பவுலர்கள்

பவுலர்கள் என்று பார்த்தால் உமேஷ் யாதவ் கடுமையாக திணறி வருகிறார். அதேபோல் ஷமியும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் இந்திய டெஸ்ட் அணியில் வரும் நாட்களில் புஜாரா, ரஹானே, கே . எல் ராகுல், ரோஹித் சர்மா, ஜடேஜா, பும்ரா, சாகா ஆகியோர் மட்டுமே இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

நீக்கம்

நீக்கம்

இவர்களை தவிர மீதம் இருக்கும் வீரர்களை நீக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. அதன்படி இந்திய அணியில் இருக்கும் உமேஷ் யாதவ், பன்ட், மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி ஆகியோர் கண்டிப்பாக நீஎக்கப்படுவார்கள். இதற்கான ஆலோசனைகளை பிசிசிஐ செய்து வருகிறது.

ஷமி

ஷமி

இன்னொரு பக்கம் ஷமி அடக்கடி காயம் காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார். இதனால் அவரும் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இதனால் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Sunday, December 20, 2020, 9:54 [IST]
Other articles published on Dec 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+