Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

147 ஆண்டு வரலாற்றில் இந்திய அணியால் நினைத்துப் பார்க்க முடியாத மைல்கல்லை தொட்ட இங்கிலாந்து

வெல்லிங்டன்: 147 அண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பிரம்மாண்ட மைல்கல் சாதனையை செய்து உள்ளது இங்கிலாந்து அணி. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 378 ரன்கள் எடுத்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 லட்சம் ரன்களை கடந்தது.

இந்த பிரம்மாண்ட மைல்கல் சாதனையை எட்டிய முதல் அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி படைத்து உள்ளது. இந்திய அணியால் இந்த மைல்கல்லை கட்டுவது என்பது அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் கூட முடியாத விஷயமாகவே இருக்கும்.

england india australia

சுமார் 147 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இதுவரை மொத்தம் 1082 போட்டிகளில் விளையாடி உள்ளது. மொத்தம் 717 கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து அணியில் ஆடி உள்ளனர். இத்தனை வீரர்களும் இணைந்து மொத்தம் 5 லட்சம் டெஸ்ட் ரன்களை எடுத்து உள்ளனர்.

மொத்தம் 18,900 தனி நபர் இன்னிங்ஸ்கள் இணைந்து 5 லட்சம் ரன்கள் எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு அடுத்து அதிக ரன்கள் எடுத்துள்ள இரண்டு அணிகள் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகும். ஆஸ்திரேலியா 147 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த அணி 4,28,794 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா 2,78,751 டெஸ்ட் ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியால் 5 லட்சம் ரன்கள் என்ற மைல்கல்லை நிச்சயம் எட்ட முடியும் என்றாலும், அது அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் நடக்க வாய்ப்பில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த அணி என்ற சாதனையும் இங்கிலாந்து வசம் உள்ளது. இதுவரை மொத்தம் 929 முறை இங்கிலாந்து வீரர்கள் சதம் அடித்து உள்ளனர்.

Story first published: Saturday, December 7, 2024, 14:30 [IST]
Other articles published on Dec 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+