Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேற்கிந்திய தீவுகளில் பீர் பாட்டிலால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்ட அவஸ்தையை பாருங்கள்

ஆன்டிகுவா: மேற்கு இந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பீர் மதுபான பாட்டிலுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

4 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக மேற்கு இந்திய தீவுகளுக்கு இந்தியா சுற்றுப் பயணம் சென்றுள்ளது. அங்கு, இளம் வீரர்கள் ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, உமேஷ் யாதவ் ஆகியோர் பீர் பாட்டிலை கையில் வைத்து போட்டோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

Beer trouble' for Team India players as BCCI asks youngsters to 'behave'

இதை பார்த்து டென்ஷனாகிப்போனது பிசிசிஐ நிர்வாகம். கிரிக்கெட் வீரர்கள் எதை செய்தாலும், சிறுவர்கள் அதை பேஷனாக கருதி பின்பற்றும் நிலையில், இந்த வீரர்களின் செய்கை இளம் தலைமுறையிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வலுவான கண்டனத்தை பதிவு செய்துள்ளது பிசிசிஐ.

அணி மேலாளர் ரியாஸ் பகவானை பிசிசிஐ உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டு, இதுபோன்ற ஒழுங்கீனங்களில் வீரர்கள் ஈடுபட கூடாது என்று கறாராக கூறியுள்ளனர். வீரர்களிடம் ஓடிச்சென்று ரியாஸ் காதை கடிக்க, தற்போது சோஷியல் மீடியாக்களில் இருந்து படங்களை அவசரமாக நீக்கிவிட்டனர்.

தண்ணில கண்டம் அப்படீம்பாங்களே அது இதுதானோ..

Story first published: Saturday, July 16, 2016, 17:41 [IST]
Other articles published on Jul 16, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+