Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கல்யாணம் ஆகற வரைக்கும் எல்லா ஆண்களும் சிங்கம் தான்.. ஆனா அதுக்கப்புறம்.. தெறிக்கவிட்ட தல தோனி!

சென்னை : கல்யாணம் நடக்கற வரைக்கும் அனைத்து ஆண்களும் சிங்கங்கள் தான் என்று முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தோனி, தன்னுடைய வீட்டில் தன்னுடைய மனைவி சாக்ஷியின் ராஜ்ஜியம்தான் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு மனிதனுக்கும் 50 வயதை கடந்த பின்பே திருமணத்தின் உண்மையான மகிழ்ச்சி மற்றும் அன்பு கிடைப்பதாகவும் கூறினார். 55க்கு பிறகே உண்மையான காதல் வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

 தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து

தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து

கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் தோனி சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசினார்.

 தோனி வேடிக்கை கருத்து

தோனி வேடிக்கை கருத்து

நிகழ்ச்சியில் பேசிய தோனி, அனைத்து ஆண்களும் தனக்கு திருமணம் ஆகும்வரை சிங்கங்களாகத்தான் இருப்பார்கள் என்று வேடிக்கையாக தோனி குறிப்பிட்டார்.

 சாக்ஷி ஹாப்பி

சாக்ஷி ஹாப்பி

தனது வீட்டில் தன்னுடைய மனைவியின் ராஜ்ஜியம்தான் என்று தெரிவித்துள்ள தோனி, சாக்ஷி மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே தானும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

 தோனியின் மகிழ்ச்சி ரகசியம்

தோனியின் மகிழ்ச்சி ரகசியம்

வீட்டில் அனைத்து விஷயங்களையும் தன்னுடைய மனைவியின் கட்டுப்பாட்டில் தான் விட்டுவிடுவதாக தோனி தெரிவித்தார். தன்னுடைய மனைவி சாக்ஷியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அவர், கூறுவது அனைத்திற்கும் எதற்கும் தான் தலையாட்ட வேண்டும் என்றும் தோனி கூறினார்.

 உண்மையான அன்பு வெளிப்படும்

உண்மையான அன்பு வெளிப்படும்

நம்முடைய பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விலகி 50 வயதுக்கு மேல் நாம் ரிலாக்சாக ஆகும்போது தான் உண்மையான அன்பு திருமணத் உறவில் வெளிப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 27, 2019, 19:48 [IST]
Other articles published on Nov 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+