Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் ரியல் மாஸ்.. திடீரென்று தோனியை கொண்டாடும் ரசிகர்கள்.. காரணம் என்ன தெரியுமா?

சென்னை: "ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சவுரவ் கங்குலி செயல்படவில்லை. ஆனால் விராட் கோலியை எப்போதும் கங்குலி விரும்பவில்லை" இந்திய தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா சொல்லிய வார்த்தைகள் இவை. டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகிய போது, களத்தில் போராடியதை விடவும் களத்திற்கு வெளியே அதிக போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டியதிருந்தது என்று அனுஷ்கா சர்மா பதிவிட்டிருந்தார்.

இந்த இரு வாக்கியங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, விராட் கோலி ஒட்டுமொத்த பிசிசிஐ அமைப்பையும் எதிர்த்து இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு முறையும் விராட் கோலி, தோனியை குறிப்பிட்டு பேசியதற்கான காரணமும் இதில் இருக்கும் மறைமுக செய்தியாக உள்ளது.

ஆம், 2007ம் ஆண்டு இந்திய அணியில் இருந்த சீனியர்கள் வீரர்களை கடந்து கேப்டனாக பொறுப்பேற்றது முதல், உலகக்கோப்பைக்கு பின் சீனியர்களை அணியில் இருந்து நீக்கியது, டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவான் வீரர்கள் ஓய்வுக்காக காத்திருந்தது, இளம் வீரர்களை தேடி தேடி கொண்டு வந்தது என மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் செய்த காரியங்கள் சாதாரணமானவை அல்ல.

தோனியின் கட்டுப்பாடுகள்

தோனியின் கட்டுப்பாடுகள்

வேறு எந்த வீரராக இருந்திருந்தாலும், பாதியிலேயே கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன்சியில் இருந்தும் விலகி இருப்பார்கள். ஆனால் தோனி பிசிசிஐ அமைப்பில் இருந்து இந்திய அணி வீரர்கள் வரை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அப்படி கொண்டு வந்ததற்கு தோனிக்கு, சீனிவாசன் என்ற ஒரு மனிதர் உதவியாக இருந்துள்ளார்.

சீனிவாசன் - தோனி

சீனிவாசன் - தோனி

இந்திய அணிக்கு தேவை வெற்றி. அந்த வெற்றியை தோனியால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சீனிவாசனுக்கு தோனியால் விதைக்க முடிந்தது. வேறு எந்த வீரராலும் கொடுக்க முடியாத நம்பிக்கையை, தோனி கொடுத்ததன் விளைவாக சீனிவாசனின் நம்பிக்கையை தோனியால் பெற முடிந்தது. தோனி நினைக்கும் வெற்றியை பெறுவதற்கு பிசிசிஐ முதல் அனைத்து தளங்களில் சரியான பணிகள் நடக்க வேண்டும்.

தோனியின் வழிகாட்டி

தோனியின் வழிகாட்டி

அதனை தனது உற்ற நண்பரும், வழிகாட்டியுமான சீனிவாசன் மூலம் தோனி செய்து முடித்தார். 2012ம் ஆண்டு உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம், இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்று இந்திய அணி அடிமேல் அடி வாங்கியது. அப்போது கேப்டன்சியில் இருந்து தோனியை தூக்க வேண்டும் என்ற பேச்சுகள் எழுந்தன. இதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், தோனியின் ஒரு பான் கால் ஒட்டு மொத்த தேர்வுக்குழுவினரையும் அதிரடியாக நீக்க வைத்தது.

தோனியின் சாம்ராஜ்ஜியம்

தோனியின் சாம்ராஜ்ஜியம்

பவர் எங்கு இருந்ததோ, அங்கே நட்புறவை தோனி கொண்டதால், அவரை யாராலும் சூழ்ச்சி செய்து வீழ்த்த முடியவில்லை. ஆனால் கோலி, முக்கிய நிர்வாகிகளுடன் மோதல் போக்கை கொண்டு, தம் பேட்டிலிருந்து ரன் வருகிறது என்ற நம்பிக்கையால், தாம் வைத்தது சட்டம் என்ற பாணியில் நடந்து கொண்டார். இதனால் கோலியின் வீழ்ச்சிக்காக காத்து கொண்டிருந்த நபர்கள் நேரம் வந்ததும் கோலியை பழிவாங்கினார்கள். ஆனால் தோனியோ பிசிசிஐ தலைவரையே தனது ரசிகர் படைக்கு தளபதி போல் மாற்றினார். கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் இந்திய அணிக்காக தோனி விளையாடியதே, பொற்காலம். எந்த சர்ச்சையும் இல்லாமல் வெற்றிகளை குவித்து கொண்டே இந்திய அணி முன்னேறியது. இப்போது நடக்கும் அரசியலை எல்லாம் பார்க்கும் போது, தோனி எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பியுள்ளார் என்பது அனைவருக்கும் வியப்பாக உள்ளது.

Story first published: Wednesday, February 15, 2023, 20:04 [IST]
Other articles published on Feb 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+