Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த ரணகளத்திலேயும் இதுங்களுக்கு இப்படி ஒரு கிளுகிளுப்பு.. தேவையா டக்கெட்டு!

லண்டன்: நாடுகள் எல்லாம் கொரோனா வைரஸால் நடுநடுங்கிப் போய்க் கிடக்கின்றன. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், ஒரு இன்ஸ்டாகிராம் மாடல் அழகியும் அடித்துள்ள காமெடி லூட்டி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகமே கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பேர் இறந்துள்ளனர். பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் அனைத்துத் துறைகளும் பெரும் பாதிப்பை இதனால் சந்தித்துள்ளன.

விளையாட்டு உலகமும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. பல சர்வதேச போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. பல போட்டித் தொடர்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன. கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போட்டிகள்தான் பெரும் பாதிப்பைசந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

போட்டிகள் ரத்தாகின்றன

போட்டிகள் ரத்தாகின்றன

சர்வதேச அளவில் புகழ் பெற்ற லா லிகா, பிரீமியர் லீக், என்பிஏ ஆகிய போட்டித் தொடர்கள் தள்ளிப் போடப்பட்டு விட்டன. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியாவில் ஐபிஎல் தள்ளிப் போயுள்ளது. ரோட் சேப்டி சீரிஸ் தள்ளிப் போடப்பட்டு விட்டது. ஆசியா லெவன் வேர்ல்ட் லெவன் போட்டி தள்ளிப் போய் விட்டது. இங்கிலாந்து அணியின் இலங்கை டூர் தள்ளிப் போயுள்ளது.

பாதிக்கப்படும் கிரிக்கெட் தொடர்கள்

பாதிக்கப்படும் கிரிக்கெட் தொடர்கள்

இந்தியா -தென்னாப்பிரிக்கா ஒரு நாள் போட்டித் தொடர் ரத்தாகி விட்டது. அனேகமாக ஐபிஎல் தொடரும் கூட ரத்தாகலாம் என்று கூறப்படுகிறது. இப்படி பல போட்டிகள் ரத்தாகியுள்ளன அல்லது தள்ளிப் போயுள்ளன. இதனால் வீரர்கள், வீராங்கனைகள் ஜாலியாக வீடுகளில் பொழுதைப் போக்கிக் கொண்டுள்ளனர். அல்லது குடும்பத்துடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று பொழுதைப் போக்குகின்றனர்.

கலகலப்பான இன்ஸ்டாகிராம் பகிர்வு

கலகலப்பான இன்ஸ்டாகிராம் பகிர்வு

இந்த நிலையில்தான் இன்ஸ்டாகிராமில் ஒரு கலகலப்பான பதிவைப் பார்க்க நேரிட்டது. அதாவது இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்ற கவர்ச்சி ஸ்டார் கேத்தி பெல் என்பவர் ஒரு போட்டோவைப் போட்டிருந்தார். பார்க்கவே பயங்கர கவர்ச்சியாக உள்ளது அந்த போட்டோ. மொத்தம் 2 போட்டோக்களைப் போட்டுள்ளார். அதைப் போட்டு அதற்குக் கீழே நான் என்ன நினைக்கிறேன்னு உங்களால ஊகிக்க முடியுதான்னு கேட்டிருந்தார்.

ஸ்டாரின் கவர்ச்சி போஸ்

ஸ்டாரின் கவர்ச்சி போஸ்

அவரது போஸும், அவர் கேட்ட கேள்வியுமே பல அர்த்தங்களைச் சொல்வதாக உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் வந்து அதற்கு காமெடியாக ஒரு பதிலைப் போட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸால் இந்த செஷன் பாதிக்குமா அல்லது தொடர்ந்து நடக்குமா என்று கேட்டுள்ளீர்கள் என்று நக்கலாக பதிலளித்துள்ளார். இது உண்மையில் டபுள் மீனிங் பதிலாகும்.

வேலையில்லாமல் போனால்

வேலையில்லாமல் போனால்

இந்த இன்ஸ்டாகிராம் போட்டோ இப்போது வைரலாகியுள்ளது. டக்கெட்டுக்கு பலரும் வந்து பதில் கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்த ரணகளத்திலும் இவர்களுக்கு இந்த கிளுகிளுப்பு தேவையா.. நாம கேக்கலைங்க.. யாரோ கேட்கிறாங்க. அது சரி வேலையே இல்லாமல் போகும்போது இப்படித்தானே பொழுதைப் போக்கத் தோன்றும்.

Story first published: Wednesday, March 18, 2020, 8:56 [IST]
Other articles published on Mar 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+