Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க நியாயம் இது? அஸ்வின் செஞ்சா தப்பு.. அதே உங்க ஆளு செஞ்சா மட்டும் சரியா?

Recommended Video

சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்... அஸ்வினுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்

லண்டன் : இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையே ஆன ஒருநாள் போட்டியில் ஸ்டம்பிங் சர்ச்சை வெடித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பென் போக்ஸ், அயர்லாந்து வீரர் ஆண்ட்ரூ பால்பிர்னி காலை தூக்கும் வரை காத்திருந்து ஸ்டம்பிங் செய்தார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த ஸ்டம்பிங்-குக்கு மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். இதற்கு அயர்லாந்து அணியின் கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிலர் இந்த சம்பவம் விளையாட்டு தர்மத்தை மீறியது என கருத்து கூறியுள்ளனர்.

கொடி பிடிக்கும் ரசிகர்கள்

கொடி பிடிக்கும் ரசிகர்கள்

ஆனால், பெரும்பாலான இங்கிலாந்து ரசிகர்கள், இந்த சம்பவம் சரியான ஒன்று தான். விதிக்கு உட்பட்டு தான் விக்கெட் கீப்பர் போக்ஸ் ஸ்டம்பிங் செய்தார் என அவர்கள் தங்கள் நாட்டு வீரருக்கு கொடி பிடித்து வருகின்றனர்.

விளக்கம்

விளக்கம்

இது எப்படி சரியான ஒன்று என்பது குறித்து, இங்கிலாந்து ரசிகர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். பேட்ஸ்மேன் தன் காலை சமநிலைக்கு கொண்டு வராமல் தடுமாறி வந்தார். அப்போது, அவர் தடுமாறி காலை தரையை விட்டு மேலே தூக்கும் வரை சில வினாடிகள் காத்திருந்து ஸ்டம்பிங் செய்தார். இது சரிதான் என கூறி வருகின்றனர்.

ஏமாற்று வேலை

இதே இங்கிலாந்து ரசிகர்கள் தங்கள் நாட்டு வீரர் ஜோஸ் பட்லரை, அஸ்வின் மன்கட் முறையில் ரன்-அவுட் செய்தது தவறு. அது விதிக்கு உட்பட்டு இருந்தாலும், பட்லர் கிரீஸை விட்டு வெளியேறும் வரை அஸ்வின் காத்திருந்து ரன் அவுட் செய்தார். அது ஏமாற்று வேலை என கூறினர்.

இது மட்டும் சரியா?

இது மட்டும் சரியா?

அதே இங்கிலாந்து ரசிகர்கள் தான் இப்போது போக்ஸ் சில வினாடிகள் காத்திருந்து ஸ்டம்பிங் செய்தது சரி என கூறி உள்ளனர். அப்ப இங்கிலாந்து வீரரை, இந்தியர் ஒருவர் சில வினாடி காத்திருந்து ரன் அவுட் செய்தால் தவறு.. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சில வினாடி கழித்து ஸ்டம்பிங் செய்தால் சரியா? என இந்திய ரசிகர்கள் நியாயம் கேட்டு வருகிறார்கள்.

Story first published: Sunday, May 5, 2019, 18:40 [IST]
Other articles published on May 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+