Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விரைவில் ‘சர் பென் ஸ்டோக்ஸ்’ என்று நீவீர் அழைக்கப்படுவீராக… காத்திருக்கும் உயரிய விருது

லண்டன்: இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல முக்கிய வீரராக இருந்த பென் ஸ்டோக்ஸிற்கு அந்நாட்டின் உயரிய விருதான நைட் ஹூட் என்ற விருது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியானது பவுண்டரிகள் அடிப்படையில் கோப்பையை வென்றது. 44 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக அந்த அணி உலக சாம்பியனாகி சாதனை படைத்தது.

அந்த இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வெற்றிபாதைக்கு சென்றவர் அந்த அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். போட்டியின் இறுதி ஓவரிலும், அதை தொடர்ந்து வந்த சூப்பர் ஓவரிலும் பென் ஸ்டோக்ஸ் பிரமாதமாக விளையாடி ஒட்டுமொத்த இங்கிலாந்து ரசிகர்களின் கதாநாயகனாக மாறி உள்ளார்.

ராணி தருவார்

ராணி தருவார்

இவரை பெருமைப்படுத்தும் விதமாக இங்கிலாந்தின் உயரிய நைட் ஹூட் என்ற விருது வழங்கப்படும் என்று எதிர்பாரக்கப்படுகிறது. அந்த விருதினை இங்கிலாந்தின் அரசர்கள் அல்லது ராணி வழங்குவார்கள்.

இதுவரை 11 பேர்

இதுவரை 11 பேர்

முன்னதாக இங்கிலாந்தை சேர்ந்த 11 கிரிக்கெட் வீரர்கள் இந்த விருதினை பெற்றிருக்கின்றனர். கடைசியாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலிஸ்டர் குக் இந்த விருதை பெற்றார். இந்த விருதை பெற்றவர்கள் மிஸ்டர் என்பதற்கு பதிலாக இனி தம்மை சர் என்று எழுதுவார்கள்.

பிரதமராகும் நிலை

பிரதமராகும் நிலை

பிரதமர் தெரசா மே, இம்மாத இறுதியில் விடை பெறும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களான போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெரேமி ஹன்ட் ஆகிய இருவரில் ஒருவர் பிரதமராகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டனர்.

ஸ்டோக்சுக்கு விருது

ஸ்டோக்சுக்கு விருது

அதில், பென் ஸ்டோக்ஸ்க்கு 'நைட் ஹூட்' விருது வழங்கப்படுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு இருவரும் ஆம் வழங்கப்படும் என்று பதில் கூறி இருக்கின்றனர். எனவே, பென் ஸ்டோக்சுக்கு உயரிய விருது ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது.

Story first published: Wednesday, July 17, 2019, 18:15 [IST]
Other articles published on Jul 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+