Ben stokes ஓய்வு.. இவன் பெயரே ஒரு வரலாறு.. சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் செய்த 3 மாஸ் சம்பவங்கள்!
லண்டன்: இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டியுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக அறிவித்துள்ளார். 121 சர்வதேச டெஸ்ட் போட்டியிலி விளையாடியுள்ள 35 வயதான பென் ஸ்டோக்ஸ் 7228 ரன்களும், 246 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
114 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 3463 ரன்களும், 74 விக்கெட்டுகளும், 43 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 585 ரன்களும், 26 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின் சிறந்த ஆல்-ரவுண்டர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் இந்த வேளையில், அவரது கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்க சில மறக்க முடியாத ஆட்டங்களை இங்கு பார்ப்போம்.

2019 ஐசிசி உலகக் கோப்பை
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில், அழுத்தங்களை தகர்த்தெறிந்து இங்கிலாந்து அணி தனது முதல் உலகக் கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் மிக முக்கிய காரணமாக அமைந்தார். இப்போட்டியில் இறுதிவரை போராடி ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்த ஸ்டோக்ஸ், ஆட்டத்தை 'சூப்பர் ஓவர்' வரை கொண்டு சென்றார். இறுதியில் பவுண்டரிகளின் கணக்கீடு அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.
2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை
கடந்த 2010ஆம் ஆண்டு பால் காலிங்வுட் தலைமையில் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு நிலவி வந்த 12 ஆண்டுகால கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த இங்கிலாந்துக்கு பென் ஸ்டோக்ஸ் மீண்டும் கோப்பையை வாங்கி தந்தார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில், பொறுப்புடன் விளையாடி ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்த அவர், இங்கிலாந்து அணி தனது இரண்டாவது டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற வழிவகுத்தார்.
ஹெடிங்லி சாதனை (ஆஷஸ் 2019)
பென் ஸ்டோக்ஸின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, 2019 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹெடிங்லி மைதானத்தில் அவர் ஆடிய ஆட்டத்தை ஒருபோதும் தவிர்க்க முடியாது. தோல்வியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து அணியை, அதிரடியான ஆட்டத்தின் மூலம் மீட்டெடுத்தார். கடைசி விக்கெட்டுக்கு பவுலரான ஜாக் லீச்சுடன் இணைந்து அசாத்திய போராட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியைப் தேடித்தந்தார்.


Click it and Unblock the Notifications

