Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. IPL ல் பென் ஸ்டோக்ஸ் இருக்க மாட்டார்? காரணம் என்ன?

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முறையும் சென்னை அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல்படவுள்ளார். இந்த போட்டியுடன், தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கேவில் பென் ஸ்டோக்ஸ்

சிஎஸ்கேவில் பென் ஸ்டோக்ஸ்

மே 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்தான் தோனி விளையாடும் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி நிர்வாகம் ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. தோனிக்கு பின்னர் கேப்டன் பொறுப்பு ஸ்டோக்ஸிற்கு வழங்கப்படலாம் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.

ஆல்-ரவுண்டர்கள்

ஆல்-ரவுண்டர்கள்

அதேபோல் பென் ஸ்டோக்ஸின் வருகையால் சென்னை அணியின் ஆல் ரவுண்டர்கள் எண்ணிக்கை அதிபயங்கரமாக உள்ளது. ஏற்கனவே ஜடேஜா, சிவம் தூபே ஆகியோர் சிறப்பாக ஆல் ரவுண்டர்களாக விளையாடி வரும் நிலையில், ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்றும் திறமை கொண்ட ஸ்டோக்ஸ் சென்னை அணி இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி பகுதியில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. ஆஷஸ் தொடருக்கான தயாரிப்பு பணிகள் என்பதால், பென் ஸ்டோக்ஸ் அதனை மிஸ் செய்ய விரும்பவில்லை.

பிளே ஆஃப் சுற்று

பிளே ஆஃப் சுற்று

இதில் பங்கேற்பதற்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதால், பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்லின் கடைசி சில ஆட்டங்களில் இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடக்கும் சூழலில், பென் ஸ்டோக்ஸ் இல்லாதது சென்னைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Story first published: Wednesday, February 22, 2023, 21:53 [IST]
Other articles published on Feb 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+