For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓவர் த்ரோ ரன் வேணாம் என்றார் ஸ்டோக்ஸ்.. ரகசியத்தை லீக் செய்த பவுலர்.. அப்ப உலக கோப்பை யாருக்கு?

லண்டன்: உலக கோப்பை பைனல் கடைசி ஓவரில், வழங்கப்பட் ஓவர் த்ரோவை ரத்து செய்யுமாறு அம்பயரிடம் பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை விடுத்ததாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

உலக கோப்பை பைனல் போட்டி தொடர்பான சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.

போட்டியின்போது கடைசி ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க பென் ஸ்டோக்ஸ் ஓடியபோது பேட்டில் தவறுதலாகப் பட்ட த்ரோ பவுண்டரிக்குச் சென்றது. இதை யடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட அதுவும் டிராவில் முடிந்தது. இதை தொடர்ந்து அதிக பவுண்டரி அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து முதல்முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது.

சர்ச்சையான ஓவர் த்ரோ

சர்ச்சையான ஓவர் த்ரோ

அந்த ஓவர் த்ரோவே, போட்டி டிராவில் முடிய முக்கிய காரணமாகவும் அமைந்தது. இதற்காக கேன் வில்லியம்சனிடம், பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் புதிய தகவல் வெளி வந்து வைரலாகி கொண்டிருக்கிறது.

வெளியான விவரங்கள்

வெளியான விவரங்கள்

இந்நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இறுதிப் போட்டியின் போது, குறிப்பாக அந்த ஓவர் த்ரோ ரன்கள் கிடைத்த ஓவரில் என்ன நடந்தது? பென் ஸ்டோக்ஸ் கூறியது என்ன போன்ற விவரங்களை வெளியிட்டு உள்ளார்.

ரன்களாக கணக்கு

ரன்களாக கணக்கு

கிரிக்கெட் விதிகளின் அடிப்படையில் பீல்டர் வீசும் ஒரு பந்து தடுக்கப்படாமல் பவுண்டரிக்கு சென்றால் அது ரன்களாகத்தான் கணக்கெடுத்துக்கொள்ளப்படும். இந்த விதியை நம்மால் எதுவும் செய்ய முடியாது.

ரன்கள் வேண்டாம்

ரன்கள் வேண்டாம்

பைனல் மேட்ச்சில் அந்த காட்சிகளை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் இது குறித்து களத்தில் இருந்த நடுவரிடம் சென்று அந்த 4 ரன்களை வழங்க வேண்டாம் என்று பென் ஸ்டோக்ஸ் கேட்டுக்கொண்டது தொடர்பாக நான் கேப்டன் மைக்கேல் வாகனுடன் விவாதித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

5 ரன்கள் கணக்கு

5 ரன்கள் கணக்கு

5 ரன்களுக்கு பதிலாக 6 ரன்கள் வழங்க நடுவர்கள் முடிவு செய்தது பிழை என்று நடுவர் சைமன் டபெல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், பீல்டர் பந்தை எறிய முயன்றபோது பேட்ஸ்மேன்கள் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்து இருப்பார்கள் என்று நடுவர் நினைத்திருப்பார்.

ரீப்ளே காட்சிகள்

ரீப்ளே காட்சிகள்

ஆனால் டிவி ரீப்ளேவில் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் பேட்ஸ்மேன்கள் கிராஸ் செய்யாததால் அடுத்தப் பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டிருக்கக்கூடாது. அதில் ரஷித் தான் அடுத்த பந்தை எதிர்கொண்டிருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Story first published: Wednesday, July 17, 2019, 18:22 [IST]
Other articles published on Jul 17, 2019
English summary
Ben stokes asked umpire to reject overthrow runs says James Anderson,
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+