Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

24 பந்துகளில் படைத்த சாதனை.. 43 வருஷ ரெக்கார்ட்டை முடித்த பென் ஸ்டோக்ஸ்.. பஞ்சரான வெஸ்ட் இண்டீஸ்!

பர்மிங்ஹம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் அரைசதம் விளாசி இங்கிலாந்து ஜாம்பவான் இயான் போத்தமின் 43 ஆண்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகவேகமாக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 282 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை விளாசியது.

eng vs wi mark wood Ben Stokes

அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 95 ரன்களை சேர்த்தார். தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 94 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கியது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 175 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணியின் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனால் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 82 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - பென் டக்கெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் பவுண்டரியாக பொளந்து கட்டினார். சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

இதன் மூலமாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இங்கிலாந்து ஜாம்பவான் இயான் போத்தமின் சாதனையை முறியடித்தார். 1981ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்தின் இயான் போத்தம் 28 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. இதனை பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை பாகிஸ்தான் ஜாம்பவான் மிஸ்பா உல் ஹக்கிடம் உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 21 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 23 பந்துகளில் அரைசதம் அடித்து 2வது இடத்திலும் உள்ளார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் அரைசதம் அடித்து 3வது இடத்திலும், காலிஸ் 24 பந்துகளில் அரைசதம் அடித்து 3வது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Sunday, July 28, 2024, 23:08 [IST]
Other articles published on Jul 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+