Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஷஸ் டெஸ்டில் தெறிக்கவிட்ட ஸ்டோக்ஸ்.. 9 சிக்சர், 9 பவுண்டரிகள்.. எல்லை கோட்டில் நின்ற 9 ஃபில்டர்கள்

லண்டன் : ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மரண மாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 416 ரன்களும் இங்கிலாந்த அணி 325 ரன்கள் எடுத்தன.

91 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனை அடுத்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

Ben stokes fiery innings in ashes test put australia under pressure

இதில் 114 ரன்களுக்க்ய் 4 விக்கெட்டுகள் என்ற ஸ்கோருடன் கடைசி நாள் ஆட்டத்தை இங்கிலாந்து விளையாடியது. அப்போது பென் டக்கட் 83 ரன்கள் எடுத்து வெளியேற பாரிஸ்டோ 10 ரன்கள் இருக்கும்போது ஆஸ்திரேலியாவின் கேப்மாரித்தனத்தால் ரன் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா ஏமாற்ற ஆட்டம் விளையாடுகிறது என்பதை புரிந்து கொண்ட பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய பேட்டால் அதற்கு பதிலடி கொடுத்தார்.

அதுவரை பொறுமை காத்து வந்த பென் ஸ்டோக்ஸ், பிறகு கையில் விக்கெட் இல்லை என்பதை தெரிந்து கொண்டு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் பென் ஸ்டோக்சை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக தடுமாறினர். பவுண்டரி சிக்ஸர்கள் என பென் ஸ்டோக்ஸ் பறக்க விட்டதால், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. தனி ஆளாக நின்று பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை மாற்றி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பென் ஸ்டோக்ஸை கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியா அணி தங்களது பில்டர்களை பவுண்டரி அருகே நிறுத்த வைத்தது. சொல்லப்போனால் பந்துவீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பர் என அனைவரையும் தவிர மற்ற ஒன்பது வீரர்களும் பௌண்டரியில் தான் நின்று கொண்டு ரன்களை கட்டுப்படுத்த முயன்றனர்.

214 பந்துகளை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் எடுத்தார். இதில் ஒன்பது சிக்ஸர்களும் ஒன்பது பவுண்டரிகளும் அடங்கும். எனினும் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்த பிறகு ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை எடுத்தது. இந்தப் போட்டியில் ஸ்டோக்ஸ் இன் ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஏமாற்றத் தனத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டோக்ஸ் தக்க பதிலடி கொடுத்தார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Sunday, July 2, 2023, 20:24 [IST]
Other articles published on Jul 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+