For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கலாச்சாரத்தை இழுக்காதீங்க” இங்கிலாந்து குறித்து ஹர்ஷா போக்லேவின் ட்வீட்.. கொந்தளித்த பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து: மன்கட் பிரச்சினையில் ஹர்சா போக்லே கடும் விமர்சனத்தை முன்வைத்த நிலையில் அதற்கு எதிராக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கியுள்ளார்.

Recommended Video

தீப்தி ஷர்மா மன்கட் விவகாரம்... இங்கிலாந்து ரசிகர்களை விமர்சித்த ஹர்ஷா போக்லே

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியை அதன் மண்ணிலேயே வைட் வாஷ் செய்து இந்தியா சாதனை படைத்திருந்தது.

இந்த தொடரை முடித்து இந்திய வீராங்கனை ஆசிய கோப்பைக்கே சென்று விட்ட போதும், இந்த தொடரில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மன்கட் விக்கெட் சர்ச்சை மட்டும் தீர்ந்த பாடில்லை.

ஹர்ஷா போக்லே ட்வீட்

ஹர்ஷா போக்லே ட்வீட்

இங்கிலாந்து ரசிகர்கள், வீரரர்கள், ஊடகங்கள் தொடர்ந்து தீப்திக்கு எதிராக விமர்சனத்தை வைத்துக்கொண்டே இருந்தனர். அதற்கு முடிவுகட்டும் நோக்கில் நேற்று பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கடுமையான கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார். அதில், ஐசிசி விதிப்படி ஒரு வீராங்கனை விக்கெட் எடுத்ததற்கு கூட, இங்கிலாந்து ஊடகங்கள் குற்றம்சாட்டுவது வேதனை தருகிறது.

இங்கி, கலாச்சாரம்

இங்கி, கலாச்சாரம்

இங்கிலாந்துடைய கலாச்சாரமே அதுதான். உலக கிரிக்கெட்டை ஆண்டவர்கள் என்ற ஆணவம் இன்னும் அவர்களுக்குள் இருக்கிறது. இங்கிலாந்து எதை தவறு என்று சொல்கிறார்களோ நாமும் அதை தவறு என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க புத்தி இன்னும் இங்கிலாந்து பின்பற்றி வருகிறது. இங்கி, ஆஸி, செயல்படுத்தும் ஒன்றை மற்ற கிரிக்கெட் நாடுகளும் மதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது, கேள்வி கேட்போம் என ஹர்ஷா போக்லே கூறியிருந்தார்.

ஸ்டோக்ஸ் பதில்

ஸ்டோக்ஸ் பதில்

இந்நிலையில் ஹர்ஷாவின் ட்விட்டரில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ட்விட்டரில் பதில் கூறியுள்ளார். அதில், மன்கட் குறித்து மக்கள் கூறும் கருத்துகளில் எங்கிருந்து கலாச்சாரம் வருகிறது?? உலகின் அனைத்து நாடுகளிடம் இருந்தும் கருத்துக்கள் வரும். பல்வேறு மக்கள் தங்கள் கருத்துகளை கூறுவார்கள். அதற்கென இங்கிலாந்தை மட்டும் குறைக்கூறுவது தவறான ஒன்றாகும்.

2019ம் ஆண்டு சம்பவம்

2019ம் ஆண்டு சம்பவம்

2019ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் என் கை தவறுதலாக பட்டு பந்து பவுண்டரி சென்றது, கோப்பையும் வென்றோம். இதில் என்மீது எந்த தவறும் இல்லை. ஆனால் உலகம் முழுவதும் இருந்தும் எனக்கு எதிராக விமர்சனங்கள் வந்தன.

இந்திய ரசிகர்களின் கருத்து

இந்திய ரசிகர்களின் கருத்து

2 ஆண்டுகள் கழித்தும் இன்று வரை இந்திய ரசிகர்கள் எனக்கு அந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்து விமர்சிக்கின்றனர். இதனை இந்திய கலாச்சாரம் என்றா கூறவேண்டும், இல்லை. மக்களின் கருத்தை கலாச்சாரத்துடன் ஒப்பிடாதீர்கள் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Saturday, October 1, 2022, 21:13 [IST]
Other articles published on Oct 1, 2022
English summary
England All Rounder Ben stokes gives a reply for Harsha bhogle's tweet about Mankad issue
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+