Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காவ்யா மாறன் அணி வீரருக்கு கல்தா.. ஓய்விலிருந்து திரும்பிய இங்கி. ஆல்ரவுண்டர்.. உலக கோப்பைக்கு ரெடி

லண்டன் : உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக ஒரு நாள் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை அறிவித்திருந்த பென் ஸ்டோக்ஸ் தற்போது அதிலிருந்து பின்வாங்கி இருக்கிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக விளங்கும் ஸ்டோக்ஸ் கடந்த முறை உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

Ben stokes is return to play in icc odi world cup and participated in NZ series

இந்த நிலையில் மனதளவில் நெருக்கடி ஏற்பட்டதால் கிரிக்கெட்டிலிருந்து கொஞ்ச நாள் விலகி இருந்த ஸ்டோக்ஸ் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதாகவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். தம்மை விட 100 சதவீதம் பங்களிப்பை கொடுக்கும் வீரர்த்தான் இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார் .

இந்த நிலையில் ஸ்டோக்ஸ் t20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்துக்கு கோப்பையை வென்று தந்தார். இதனால் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியில் இடம்பெற வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் பென் ஸ்டாக்ஸ் அணிக்கு திரும்பி இருக்கிறார். கேப்டனாக பட்லர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜேசன் ராய்,பாரிஸ்டோ, டேவிட் மாலன்,ஜோ ரூட்,மோயின் அலி,ஆதில் ரசித், டேவிட் மில்லர், கிறிஸ் வொக்ஸ், ரேஸ் டொப்லி,மார்க் வுட், கஸ் ஆட்கின்சன் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என அனைவரும் போற்றப்பட்ட ஹாரி புருக்ஸ் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

அவர் ஐபிஎல் தொடரில் சரிவர விளையாடாமல் இருந்ததால் சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக அவர் சரிவர மாட்டார் என தேர்வு குழு இந்த முடிவை எடுத்து இருக்கிறது. இதனால் பென் ஸ்டோக்ஸ் ஆல் ரவுண்டர்களாக இருந்தாலும் தற்போது அவருடைய காயத்தை கருத்தில் கொண்டு வெறும் பேட்ஸ்மேனாக மட்டும்தான் அணியில் சேர்த்து இருப்பதாக இங்கிலாந்து அணியின் தேர்வு குழு தலைவர் கூறியுள்ளார்.

இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடரில் நான் டி20 மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து அணி நேரடியாக இந்தியா வர இருக்கிறது.

Story first published: Wednesday, August 16, 2023, 17:41 [IST]
Other articles published on Aug 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+