For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

14 நோ பால் சர்ச்சை முதல் சாதனை சதம் வரை.. ஆஷஸ் தொடரில் இன்று..

பிரிஸ்பேன்: பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது

இதில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு சுருண்டது.

இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஹாரிஸ் 3 ரன்களில் வெளியேறினார்.

வார்னர் அதிரடி

வார்னர் அதிரடி

பின்னர் வார்னருடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபஸ்சேங், நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். முதலில் அமைதியாக விளையாடிய வார்னர் பின்னர் அதிரடியை காட்ட தொடங்கினார். வார்னர் 11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாச 94 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய லாபஸ்சேங் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு வார்னர், லாபஸ்சேங் ஜோடி 156 ரன்களை சேர்த்தது.

அதிரடி சதம்

அதிரடி சதம்

வார்னரை வீழ்த்திய அடுத்த பந்திலேயே கேமிரான் கிரீனையும் வீழ்த்திய ராபின்சன் ஹாட்ரிக் வாய்ப்பை தவறவிட்டார். 240 ரன்களுக்கு6 விக்கெட் என்று ஆஸ்திரேலியா மீண்டும் சரிவை காண, டிராவிஸ் ஹேட் அதிரடியாக விளையாடினார். இங்கிலாந்து பந்துவீச்சை ஒரு கை பார்த்த அவர் 85 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

வலுவான நிலை

வலுவான நிலை

இதன் மூலம் ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றிலேயே 3வது அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹேட் படைத்தார். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்துள்ளது. ஹேட் 112 ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போது இங்கிலாந்தை விட 196 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது

Recommended Video

Ben Stokes bowls 14 no-balls! 3rd umpire misses overstepping in Gabba Ashes Test | OneIndia Tamil
நோ பால் சர்ச்சை

நோ பால் சர்ச்சை

இதனிடையே, இங்கிலாந்து பந்துவீச்சின் போது அந்த அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் 14 முறை நோ பால் வீசியுள்ளார். இந்த 14 பந்துக்கும் நடுவர் நோ பால் அறிவிக்காமல் விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நோ பாலை மூன்றாம் நடுவர் தான் அறிவிக்க வேண்டும். ஆனால் அவர் அறிவிக்காமல் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 4 நோ பாலை வீசியுள்ளார். அதில் 4வது பந்தில் வார்னர் அவுட்டானார். ஆனால் அதனை மட்டும் நடுவர் நோ பால் என அறிவித்துவிட்டார்.

Story first published: Thursday, December 9, 2021, 18:37 [IST]
Other articles published on Dec 9, 2021
English summary
Ben stokes Delivered 14 No balls and Third umpire Fails to calls it became centre of controversy in Australian cricket and Travis Head Hits a record 85 Ball ton in 1st Ashes test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+