Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது போன்று என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.... ரொம்ப மோசம்...4வது டெஸ்டில் புலம்பிய பென் ஸ்டோக்ஸ்

அகமதாபாத்: இந்தியாவுடனான டெஸ்ட் களங்கள் குறித்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வழக்கம் போல் இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தினர்.

இந்நிலையில் தன் வாழ்க்கையில் இப்படி பட்ட பிட்ச்களை பார்த்ததே இல்லை என பென் ஸ்டோக்ஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 கடைசி டெஸ்ட்

கடைசி டெஸ்ட்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்து முதல் இன்னிங்ஸில் 205/10 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. அகமதாபாத் பிட்ச் கடந்த போட்டி போன்று இல்லாமல் 4வது டெஸ்டில் பேட்டிங்கிற்கும் உதவி வருகிறது.

பேட்டிங்

பேட்டிங்

இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே, டாம் சிப்லே ஜோடி தொடக்கம் தந்தது. அக்சர் படேல் 'சுழலில்' சிப்லே (2), கிராலே (9) சிக்கினர். முகமது சிராஜின் வேகத்தில் கேப்டன் ஜோ ரூட் (5) அவுட்டானார். பின் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. 4வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்த போது முகமது சிராஜ் பந்தில் பேர்ஸ்டோவ் (28) அவுட்டானார். இதன் பின்னர் ஸ்டோக்ஸ் மற்றும் லாவ்ரன்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி ரன் உயர்ந்தது.

 அதிருப்தி

அதிருப்தி

இது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், என் வாழ்நாளில் நான் 70 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளேன். உலகின் பல்வேறு நாடுகளில் விளையாடியுள்ளேன். ஆனால் இந்த தொடரை போன்று எங்குமே கடினமாக களங்களை நான் பார்த்ததில்லை எனக்கூறினார்.

மாற்றம்

மாற்றம்

4வது டெஸ்ட் குறித்து பேசிய அவர், அகமதாபாத் மைதானம் 3வது டெஸ்டில் விளையாடியதுபோல் அல்ல. மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. நாங்கள் பேட்டிங்கில் சொதப்பினோம் என நினைக்கிறேன். எங்கு தவறு செய்தோம் என நிச்சயம் ஆலோசனை மேற்கொள்வோம். 300 ரன்களை கடப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்படி நடக்கவில்லை என தெரிவித்தார்.

Story first published: Friday, March 5, 2021, 13:01 [IST]
Other articles published on Mar 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+