Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் வேகத்தை கண்முன் காட்டிய ஸ்டோக்ஸ்.. முதல் டெஸ்டில் ஆச்சர்யம்...இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சென்னை: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸின் டைவிங் கேட்ச் கிரிக்கெட் ரசிகர்களை வியக்கவைத்துள்ளது.

Ben stokes one handed Stunning slip catch video goes viral on Internet

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்களும், 2வது இன்னிங்சில் 178 ரன்களும் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் தொடக்கத்தில் திணறிய போதும் ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் மற்றும் புஜாரா ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக மீண்டது. இருப்பினும் விடாபிடியாக மோதி வரும் இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங்கை போலவே ஃபீல்டிங்கிலும் மிரட்டி வருகின்றனர்.

குறிப்பாக முதல் இன்னிங்சில் இந்திய வீரர் பும்ராவை பென் ஸ்டோக்ஸ் வெளியேற்றிய விதம் வியக்க வைத்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் போராடி மீட்ட நிலையில் கடைசி பேட்ஸ்மேனாக பும்ரா களமிறங்கினார்.அவருக்கு எதிராக ஆண்டர்சன் பந்துவீச அது பும்ராவின் பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்பாக நின்று கொண்டிருந்த பென் ஸ்டோக்கிடம் சென்றது. ஸ்டோக்ஸ் இதை அதிரடி டைவ் மூலம் லாவகமாக பிடித்து அசத்தினார்.

அவரின் அந்த டைமிங் கேட்ச் அனைவரையும் வியக்கவைத்துள்ளது. அதன் வீடியோ காட்சிகளையும் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இன்று 4ம் ஆம் நாள் ஆட்டம் என்பதால் போட்டியை டிரா செய்யவே இந்திய அணி வீரர்கள் முனைப்ப காட்ட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்சில் புஜாரா அவுட்டான பின் வாஷிங்டன் சுந்தர் நிதானமான திட்டமிட்டு ஆடி வந்தார். எனவே அவரின் பங்கு 2வது இன்னிங்சிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

Story first published: Monday, February 8, 2021, 18:11 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+