என்ன இப்படி இருக்கு? சென்னையிலிருந்து பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட போட்டோ..கொதிக்கும் இங்கிலாந்து பேன்ஸ்
சென்னை: இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சென்னையில் இருந்து வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
இந்தியா இங்கிலாந்து இடையே அடுத்த மாதம் நடக்க உள்ள கிரிக்கெட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு அணிகளும் மோதும் இந்த தொடர் ஆஸ்திரேலிய தொடரை போல விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடர் மிகப்பெரிய தொடராக நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா வென்றுள்ளது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா வெல்லும் எண்ணத்தில் இந்திய அணி உள்ளது.

இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது.

ஒருநாள்
அதன்பின் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் நடக்க உள்ளது.இலங்கையில் தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இதற்காக இன்னும் சில நாட்களில் சென்னை வர உள்ளது. இலங்கை தொடரில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்துவிட்டனர். இவர்கள் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு
இந்திய கிரிக்கெட் தொடருக்கு முன்பாக இரண்டு வாரம் இவர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். இதற்காக பென் ஸ்டோக்ஸிற்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இருந்து பென் ஸ்டோக்ஸ் போட்டோ வெளியிட்டு உள்ளார்.

போட்டோ
இந்திய கிரிக்கெட் வாரியம் மூலம் பென் ஸ்டோக்ஸிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறை ஆகும் இது. இந்த அறை மிகவும் சிறியதாக இருப்பதால் விமர்சனங்களை சந்தித்துள்ளது. பென் ஸ்டோக்ஸிற்கு மிக சிறிய அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்குதான் இவர் அடுத்த 4-5 வாரம் இருக்க வேண்டும். அதிலும் 2 வாரம் தனிமையில் இருக்க வேண்டும்.. இது மிகவும் கஷ்டம் என்று இங்கிலாந்து ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

முடியாது
இவ்வளவு சிறிய அறையை அவருக்கு கொடுத்ததை ஏற்க முடியாது. பென் ஸ்டோக்ஸ் உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர். அவருக்கு இப்படி வசதியே இல்லாத அறையை ஒதுக்கியது தவறு என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். இங்கிலாந்து வீரர்களை இந்திய அணி சிறப்பாக நடத்த வேண்டும், அவர்களை அவமதிக்க கூடாது என்று இங்கிலாந்து ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications