
டெஸ்ட்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி படு தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு பிட்ச் தான் காரணம் என ஒரு புறம் விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், மற்றொரு புறம் இங்கிலாந்து அணியின் ரொட்டேஷன் பாலிசி தான் தோல்விக்கு முக்கிய காரணம் என தெரிவித்து வருகின்றனர்.

வேதனை
இதுகுறித்து பேசியுள்ள பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணி வீரர்கள் 4வது டெஸ்டின் போது வெற்றிக்காக மிகவும் போராடினார்கள். குறிப்பாகச் சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எங்களால் இந்த 41 டிகிரி வெப்பநிலையைத் தாங்க முடியவில்லை. வயிற்றுக்கோளாரால் நான் ஒரு வாரத்தில் 5 கிலோ எடை குறைந்தேன். டாம் சிப்லே 4 கிலோவும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 கிலோ வரை எடை குறைந்துள்ளனர் என வேதனை தெரிவித்துள்ளார்.

மோசம்
இங்கிலாந்து வீரர், சாக் லீச் பந்துவீச்சுக்கு இடை இடையே பெவிலியன் சென்றார். வயிற்று கோளாறு காரணமாக அவர் களத்தில் இருந்த நேரத்தை விட டாய்லெட்டில் தான் அதிக நேரம் இருந்தார். ஆனால் இதனை தோல்விக்கு ஒரு காரணமாக கூறவில்லை. இந்திய அணி மற்றும் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி வென்றனர். எனினும் உடலில் பிரச்னைகள் ஏற்பட்ட போதும் அணிக்காக விளையாடிய வீரர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை என ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த தொடர்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி தொடங்கவுள்ளது. டெஸ்ட் தொடரில் பட்ட தோல்விக்கு பழிதீர்க்க இங்கிலாந்து அணி வீரர்கள், அபார வெற்றியடைந்ததன் உற்சாகத்த்தில் இந்திய அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











