
பென் ஸ்டோக்ஸ் காரணம்
இந்நிலையில் அவர் ஓய்வு பெறுவதற்காக கொடுத்த விளக்கம் தான் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. அதில் அவர், இது மிகவும் கடினமான முடிவு தான். எனினும் என்னால் இந்த வடிவ கிரிக்கெட்டில் அணிக்கு 100% பங்களிப்பை கொடுக்க முடியவில்லை. இதற்கு மேலும் கொடுக்க முடியாது என நினைக்கிறேன் என்பதால் ஓய்வு பெறுகிறேன் எனக் கூறினார்.

உள் அர்த்தம்?
பென் ஸ்டோக்ஸின் இந்த வார்த்தைகள், அவரை அணி நிர்வாகம் முழுமையாக பயன்படுத்தவில்லையா? என்ற குழப்பத்தை உண்டாக்குகிறது. ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் சரிவர பவுலிங் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. இந்திய அணியுடனான 3 ஒருநாள் போட்டிகளில் அவர் மொத்தமாக 3 ஓவர்களை மட்டுமே வீசினார். பார்ட் டைம் பவுலர்கள் ஓவர் வீசிய போதும், ஸ்டோக்ஸ் கண்டுக்கொள்ளப்படவில்லை.

2வது காரணம்
இதே போல மற்றொரு விஷயத்தையும் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். அதாவது 3 வடிவ கிரிக்கெட்டிலும் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனது உடல் ஒத்துழைக்கவில்லை என்று முழுமையாக கூற முடியாது. போட்டி அட்டவணைகளும் அடுத்தடுத்து இருப்பதால் கையாள முடியவில்லை எனக்கூறியிருந்தார்.

ஓய்வு இல்லை
டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வருவதால் ஒவ்வொரு அணியும் தங்களது முக்கிய வீரர்களின் பணிச்சுமையை சரியாக கையாள திட்டமிட்டு வருகிறது. ஆனால் இங்கிலாந்து அணியில் தொடர்ச்சியாக போட்டிகள் இருந்துக்கொண்டே இருப்பதும், பணிச்சுமையை அதிகமாக கொடுக்கிறதா என்ற குழப்பத்தையும் உண்டாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











