Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துவக்க வீரரா இறங்கி அடிக்கறது பிடிச்சுருக்கு... இங்கிலாந்து அணியில இந்த சான்ஸ் கிடைக்காது!

துபாய் : ஐபிஎல்லின் இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் பென் ஸ்டோக்ஸ் சீசனின் ஆரம்ப போட்டிகளில் சொந்த காரணங்களால் இணையவில்லை.

மாறாக துவக்க வீரராக களமிறக்கப்பட்ட அவர் ஆரம்ப போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையும் வழங்கவில்லை. ஆனால் கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், ராயல்ஸ் அணியில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த துவக்க வீரர் நிலை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தான் தொடர்ந்து இதில் தொடர விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான பென் ஸ்டோக்ஸ்

சிறப்பான பென் ஸ்டோக்ஸ்

ஐபிஎல் 2020 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். ஆனால் துவக்க போட்டிகளில் சொந்த காரணங்களால் அவர் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த சில போட்டிகளுக்கு முன்பு அணியில் இணைந்த அவர் சொதப்பலான ஆட்டங்களையே வழங்கினார்.

அதிரடி சதம்

அதிரடி சதம்

துவக்க வீரராக பென் ஸ்டோக்ஸ் களமிறக்கப்பட்ட நிலையில், அணிக்கு வலிமையான ஆரம்பத்தை தரத் தவறினார். ஆனால் கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணியில் தன்னுடைய இருப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவர் அடித்த சதம் அணியின் வெற்றிக்கும் ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் முன்னேற காரணமாகவும் இருந்தது.

உடைத்தெறிந்த ஸ்டோக்ஸ்

உடைத்தெறிந்த ஸ்டோக்ஸ்

அவரது சொதப்பலான ஆரம்ப போட்டிகளை அடுத்து ஏற்பட்ட கடுமையான விமர்சனங்களை தன்னுடைய ஆட்டத்தின்மூலம் ஸ்டோக்ஸ் உடைத்தெறிந்தார். இந்நிலையில் துவக்க வீரராக தொடர்ந்து களமிறங்கவே தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் கிடைக்காது

இங்கிலாந்து அணியில் கிடைக்காது

இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், டாம் பான்டன், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற வீரர்கள் துவக்க வீரர்களாக களமிறங்கும் நிலையில், தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்றும், ஆனால் ராயல்ஸ் அணியில் அந்த வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும், அதை தான் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

சிறப்பாக விளையாட முயற்சி

சிறப்பாக விளையாட முயற்சி

தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த தான் எண்ணுவதாகவும், தன்மீது நம்பிக்கை வைத்து செயல்படும் அணிக்காக தான் சிறப்பாக விளையாட முயல்வதாகவும் அவர் மேலும் கூறினார். ஒரு போட்டியில் சிறப்பாக செயல்படுவதால் அடுத்த போட்டியும் சிறப்பாக அமையும் என்பது அர்த்தமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Story first published: Friday, October 30, 2020, 11:22 [IST]
Other articles published on Oct 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+