சாதனை வரலாற்றை எழுதிய முதல் இங்கிலாந்து வீரர் -5 கேட்சுகளை பிடித்து சாதனை
நியூலாண்ட் : டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் 5 கேட்சுகளை பிடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனைக்கு பென் ஸ்டோக்ஸ் சொந்தக்காரராகியுள்ளார். முன்னதாக முகமது அசாருதீன், ஸ்டீபன் பிளமிங், க்ரீம் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட 11 வீரர்களே உலக அளவில் இந்த சாதனையை புரிந்துள்ள நிலையில் இவர்களுடன் தற்போது பென் ஸ்டோக்ஸ் இணைந்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா -இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நியூலாண்டில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐந்து பேரின் கேட்ச்களை பிடித்து அவர்களை சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நியூலாண்டில் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

பென் ஸ்டோக்ஸ் சாதனை
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒரே இன்னிங்சில் 5 கேட்சுகளை பிடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

11 வீரர்களை தொடர்ந்த பென் ஸ்டோக்ஸ்
முன்னதாக முகமது அசாருதீன், ஸ்டீபன் பிளமிங், க்ரீம் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட 11 வீரர்களே உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள நிலையில் தற்போது இங்கிலாந்திலிருந்து இந்த சாதனையை புரிந்த முதல் வீரர் என்ற பெருமை பென் ஸ்டோக்சிற்கு கிடைத்துள்ளது.

சமீபத்தில் சாதித்த வீரர்
கடந்த 2018ல் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள நிலையில் தற்போது அவரை பென் ஸ்டோக்ஸ் பின்தொடர்கிறார். ஸ்டீவ் ஸ்மித்தும் நியூலாண்டிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications