Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நாங்க மனுஷங்க.. கார் கிடையாது”.. பொதுவெளியில் பென் ஸ்டோக்ஸ் பகீர் குற்றச்சாட்டு.. சர்ச்சையில் ஐசிசி

லண்டன்: கிரிக்கெட் வீரர்கள் மிஷின்கள் கிடையாது என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ள கருத்து, ஐசிசிக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் பென் ஸ்டோக்ஸ். சமீபத்தில் டெஸ்ட் அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் நேற்று திடீரென சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

ஸ்டோக்ஸ் தனது ஓய்வு குறித்து கூறிய விளக்கம் தான் தற்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் அவர், கிரிக்கெட் அட்டவணைகள் இடைவெளியே இல்லாமல் தொடர்ச்சியாக போடப்படுவதால் 3 வடிவ கிரிக்கெட்டையும் சமாளிக்க முடியவில்லை. அதிக பாரம் காரணமாக செல்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

கிளபிய பிரச்சினை

கிளபிய பிரச்சினை

இந்த கருத்து கிரிக்கெட் வட்டாரங்களில் சூடுபிடித்தது. ஏற்கனவே டி20 கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு தொடர்களில் வரும் பணத்தை கருத்தில் கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போது ஸ்டோக்ஸும் பணிச்சுமை இருப்பதாக கூறியதால் சர்ச்சை வெடித்தன.

மீண்டும் ஒரு சர்ச்சை

மீண்டும் ஒரு சர்ச்சை

இந்நிலையில் இந்த சூடு அடங்குவதற்குள் மற்றொரு பேட்டியை பென் ஸ்டோக்ஸ் கொடுத்துள்ளார். அதில், அதிக போட்டிகள் நடைபெற்றால் தான் கிரிக்கெட்டின் வளர்ச்சி இருக்கும். அதற்கு மிகச்சிறந்த வீரர்களே தான் அனைத்து போட்டியிலும் இருக்க வேண்டும். ஆனால் நிறைய போட்டிகள் அடுத்தடுத்து நடத்தப்படுகிறது.

மாற்று நடவடிக்கைகள்

மாற்று நடவடிக்கைகள்

இதனை சமாளிப்பதற்காக அனைத்து கிரிக்கெட் வாரியங்களும், முன்னணி வீரர்களுக்கு சில போட்டிகளில் ஓய்வு அளித்துவிட்டு, புதிய அணியுடன் ஆடுகிறது. வீரர்களும் ஓய்வுக்காக சென்றுவிடுகின்றனர். ஆனால் இங்கிலாந்து அணியில் சமீபத்தில் ஒரு முட்டாள்தனமான சம்பவம் நடந்தது.

என்ன ஆனது

என்ன ஆனது

நியூசிலாந்துடன் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினோம். 2வது மற்றும் 3வது டெஸ்டிற்கு இடைப்பட்ட காலத்தில் நெதர்லாந்துடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட அதே அணியுடன் செல்கிறோம். இது எவ்வளவு முட்டாள்தனமான ஒன்று. கிரிக்கெட் வீரர்கள் ஒன்றும் கார்கள் கிடையாது. எரிவாயு போட்டவுடன் செல் என்றால் சென்றுவிட வேண்டும், பிறகு மீண்டும் எரிவாயு போட்டால் செல்லலாம் என்பதை போன்று நாங்கள் கிடையாது என பென் ஸ்டோக்ஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, July 20, 2022, 16:03 [IST]
Other articles published on Jul 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+