Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பென் ஸ்டோக்ஸ் விராட் கோலி மாதிரி... சூப்பரா கலக்குவாரு... வெயிட் பண்ணுங்க

லண்டன்: பென் ஸ்டோக்ஸ்க்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டால் அவர் இந்திய கேப்டன் விராட் கோலியை போல சிறப்பாக செயல்படுவார் என்று கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் தொடர் வரும் ஜூலை 8ம் தேதி இங்கிலாந்தில் துவங்கவுள்ளது. இதற்கென மேற்கிந்திய தீவுகள் அணியினர் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது குழந்தைக்காக தன்னுடைய மனைவியுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளதால், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ஜூலை 8ம் தேதி துவக்கம்

ஜூலை 8ம் தேதி துவக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இதையடுத்து கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் துவக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக வரும் ஜூலை 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. இதையடுத்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியினர், தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.

2 போட்டிகளில் விளையாட மாட்டார்

2 போட்டிகளில் விளையாட மாட்டார்

இதனிடையே, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது இரண்டாவது குழந்தையை வரும் ஜூலை மாதத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறார். தன்னுடைய மனைவியுடன் அவர் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டன் பொறுப்பு, துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணி வீரர்களையும் சிறப்பாக்குவார்

அணி வீரர்களையும் சிறப்பாக்குவார்

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ்க்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டால், அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி போல தானும் சிறப்பாக செயல்பட்டு, தன்னுடைய அணி வீரர்களையும் சிறப்பாக செயல்பட வைக்கும் திறமை பென் ஸ்டோக்ஸ்க்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பந்து ஸ்விங் ஆகும்

பந்து ஸ்விங் ஆகும்

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தவிர்க்க, பந்தை ஷைன் செய்ய எச்சில் பயன்பாட்டிற்கு ஐசிசி தடை விதித்துள்ள நிலையில், இந்த தொடர் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், நீண்ட நாட்களாக மைதானங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், புற்கள் அதிகமாக இருக்கும் என்றும், பருவநிலையும் நன்கு கைகொடுக்கும் என்பதால் பந்து ஸ்விங் ஆவதில் பிரச்சினை இருக்காது என்றும் ஜோ ரூட் கூறியுள்ளார்.

Story first published: Thursday, June 18, 2020, 18:30 [IST]
Other articles published on Jun 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+