பிசிசிஐ, இந்திய அணி ரெண்டும் தோனி வீட்டு சொத்தா..? அப்ப கேள்வி கேட்டாரு..! இப்ப என்னன்னு பாருங்க..!!
மும்பை: தோனியை நான் தப்பாக சொல்லவில்லை, எல்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று பெங்கால் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி விளக்கம் கூறியிருக்கிறார்.
பிரபல நாளிதழ் ஒன்றில் அண்மையில் ஒரு செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை உண்டு பண்ணியிருந்தது. தோனி என்ன பெரிய ஆளா? பிசிசிஐ என்ன தோனியின் சொத்தா என்று கேள்வி எழுப்பியிருந்தார் பெங்கால் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி.
அவர் கூறியதன் சாராம்சம் இதுதான்: தோனி அணிக்காக நிறைய செய்து இருக்கிறார். நாட்டுக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். சமீபத்தில் தோனி விலகி கொள்ள வேண்டும் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியிருந்தார். தோனி வேண்டும் என்று கோலி சொன்னாலும் பிசிசிஐ தோனி குறித்த முடிவை உடனே எடுக்க வேண்டும்.

கடினமான முடிவு
கடின முடிவு தான், ஆனாலும் அந்த முடிவை எடுப்பதில் பிசிசிஐ தயக்கம் காட்ட கூடாது. தைரியமாக செயல்பட வேண்டிய நேரம் இது. தற்போது நடவடிக்கை தேவை. தோனியின் கடந்த காலத்தை பார்க்கும் போது, அவருக்கு பிசிசிஐ நிறைய வாய்ப்புகள் வழங்கிவிட்டது.

தோனியின் சொத்தா?
எவ்வளவோ திறமையான வீரர்கள் வரிசையில் காத்து கிடக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்திய அணி எந்த ஒருவரின் (அதாவது தோனியை சொல்கிறார்) தனியுரிமை சொத்தல்ல. நாட்டின் அணி. அதை மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

வெடித்தது சர்ச்சை
இந்த பேட்டி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது. ஒரு கட்டத்தில் அது தொடர்பான விமர்சனங்களும் எழுந்தன. தனது பேட்டி உண்மை தான் என்றும், ஆனால் அதில் தோனி பற்றி நான் கூறியது அதுவல்ல என்றும் கூறி இருக்கிறார்.
தவறு என பதிவு
தன் ட்விட்டர் பக்கத்தில் இணையத்தில் வெளியாவதை எல்லாம் நம்பவேண்டாம். என்னுடைய மவுனத்தை தவறாக புரிந்து கொள்வதா? என்று பதிவிட்டுள்ளார். 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவர் தான் மனோஜ் திவாரி. பலமுறை பிசிசிஐயின் நடவடிக்கைகளை இதுபோன்றே கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications