Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூருவில் நடக்க இருந்த மகளிர் உலககோப்பை போட்டிகள் மாற்றம்.. சின்னசாமி மைதானத்திற்கு முடிவுரை

பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் மும்பைக்கு மாற்றப்பட்டு இருக்கும் சம்பவம் அம்மாநில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் பாரம்பரியமிக்க சின்னசாமி மைதானம் முடிவை எட்டி விட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்க இருந்தது. இந்த தொடரில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெற இருந்தது.

ஆனால் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி, சாம்பியன் பட்டம் வென்றதை சின்னசாமி மைதானம் முன்பு ரசிகர்கள் கொண்டாடிய போது கூட்டநீச்சல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இதில் 48 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட்டில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து சின்னசாமி மைதானத்தில் மிகப்பெரிய போட்டிகள் நடத்துவதற்கு தகுதி இல்லை என அம்மாநில அரசு அறிவுறுத்தியது.

Bengaluru Chinnaswamy Stadium

இதன் அடுத்து பெங்களூர் புறநகர் பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை அமைக்க மாநில அரசு முடிவு எடுத்தது. இந்த தருணத்தில் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் பெங்களூரில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி நவி மும்பை கிரிக்கெட் மைதானத்தில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோத இருந்த போட்டிகளும் நடைபெறும்.

இதே போன்று அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியா வங்கதேசம் மோதும் போட்டிகள் நவி மும்பையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று இலங்கை, வங்கதேசம் வரும் அக்டோபர் 20ஆம் தேதி மோதும் போட்டி மற்றும் இரண்டாவது அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நவி மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேலை பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், பைனல் கொழும்புவில் நடைபெறும். இதே போன்ற கௌஹாத்திகள் நடைபெற இருந்த இங்கிலாந்து இலங்கைக்கு எதிரான போட்டி கொழும்புவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே மகாராஜா டி20 தொடரை பெங்களூருவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இன்றி போட்டிகளை நடத்துகிறோம் என கர்நாடகா கிரிக்கெட் சம்மேளனம் கூறியது.

ஆனால் அதற்கும் கர்நாடக அரசு அனுமதி மறுத்துவிட்டது. அது மட்டுமில்லாமல் சின்னசாமி மைதானத்திற்கு மின்சார தொடர்பு உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் நம் மாநில அரசு ரத்து செய்து விட்டது. இதனால் பெங்களூருவின் அடையாளமாக விளங்கிய சின்னசாமி மைதானம் தனது இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, August 22, 2025, 14:35 [IST]
Other articles published on Aug 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+