Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் ஜெர்சியை போட்டு உற்சாக போஸ்... வார்னரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

சிட்னி : ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னரின் இரண்டாவது மகள் இண்டி ரே, இந்திய கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகை.

இதை பல முறை டேவிட் வார்னர் மற்றும் அவரது மனைவி இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலியின் ஜெர்சியை அணிந்து தனது மகள் கொடுத்த உற்சாக போசை புகைப்படமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேவிட் வார்னர் வெளியிட்டுள்ளார்.

இந்தியா இமாலய சாதனை

இந்தியா இமாலய சாதனை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வடிவங்களிலான தொடர்களில் இரண்டை இந்தியா வெற்றி கொண்டு இமாலய சாதனையுடன் நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் தாங்கள் இந்த தொடரில் தோல்வியுற்றாலும் இந்த தொடரின்மூலம் மிகவும் சந்தோஷமான சிறுமி ஒருவர் உள்ளார் என்று டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விராட்டின் தீவிர ரசிகை

விராட்டின் தீவிர ரசிகை

டேவிட் வார்னரின் இரண்டாவது மகள் இண்டி ரே, விராட் கோலியின் தீவிர ரசிகை. இதை வார்னரும் அவரது மனைவி கேண்டிசும் அடிக்கடி வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் விராட் கோலி பரிசளித்த அவரது ஜெர்சியை அணிந்து கொண்டு இண்டி ரே போஸ் கொடுக்க, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வார்னர் பதிவிட்டுள்ளார்.

வார்னர் நன்றி

வார்னர் நன்றி

தனது மகளுக்காக விராட் கோலி அளித்த ஜெர்சிக்கு வார்னர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இண்டி அதை மிகவும் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னைவிட ஆரோன் பின்ச்சைவிட அவள் விராட் கோலியையே மிகவும் விரும்புவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சொதப்பிய வார்னர்

சொதப்பிய வார்னர்

முன்னதாக வார்னரின் மனைவி கேண்டிசும் இதே கருத்தையே தெரிவித்திருந்தார். காயம் காரணமாக கடந்த இந்தியாவிற்கு எதிரான இறுதி 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற டேவிட் வார்னர், மிகவும் சொதப்பலான ஆட்டத்தையே அளித்திருந்தார்.

Story first published: Sunday, January 31, 2021, 16:05 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+