
புஜாரா அபாரம்
ஆஸ்திரேலியாவுக்கு 150 ரன்கள் இலக்கு வைக்க வேண்டும் என்று கடினமாக இந்திய பேட்ஸ்மேன்கள் உழைத்து வந்தனர். இதில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நட்சத்திரங்கள் மட்டும் தனி ஆளாக நின்று அதிரடியை கட்டினார். 142 பந்துகளை எதிர்கொண்டு 59 ரன்களை புஜாரா எடுத்திருந்தார்.

ஸ்மித் கேட்ச்
புஜாரா சதம் மட்டும் அடித்திருந்தால் இந்தியாவுக்கு ஒரு அளவிற்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கேட்சுகள் தான் ஆட்டத்தையே வெல்ல வைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஸ்மித் இன்று ஒரு அபார சாதனை படைத்தார். ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த நிலையில் லயான் வீசிய பந்தை புஜாரா அடித்தார்.அப்போது பந்து மிகவும் தாழ்வாக சென்றது.

ஆட்டத்தை மாற்றியது
எனினும் அதனை சரியாக கவனித்த ஸ்மித் வலது புறமாக ஒற்றை கையால் பாய்ந்து தரையோடு தரையாக அதனை பிடித்தார். இதனை பார்த்ததும் ஆஸ்திரேலிய வீரர்கள் துள்ளி குதிக்க புஜாரா அப்படியே ஷாக் ஆகி நின்றார். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய கிரிக்கெட் ஜாம்பவான் இயன் ஹெலி, நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச் இதுதான் என்று கூறினார்.
பாராட்டு
பந்து பவுண்டரிக்கு செல்லக்கூடாது என்பதற்காக ஸ்மித் கொஞ்சம் நகர்ந்து நின்றபோதிலும் பந்தை சரியாக கனித்து அவர் பாய்ந்து பிடித்தது பிரம்மிக்க வைத்ததாகவும் அவர் கூறினார். ஸ்மித்தின் இந்த அபார கேட்ச் ஆல் ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயான் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஸ்மித் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை 152 கேட்சுகளை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











