Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவா?.. ஆஸ்திரேலியாவா?.. நியூசிலாந்தா?... 2017ன் பெஸ்ட் கிரிக்கெட் அணி எது?

சென்னை: கடந்த பத்து வருடங்கள் கிரிக்கெட் உலகிற்கு சிறந்த வருடங்கள் என்று கூட சொல்லலாம். 99 செஞ்சுரி அடித்துவிட்டு 100வது செஞ்சுரி அடிக்க சச்சின் ஒருவருடம் எடுத்த காலம் போய் எல்லா போட்டியிலும் செஞ்சுரி அடிக்கும் கோஹ்லியின் காலம் வந்துவிட்டது.

எல்லா அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் புதிய சாதனை படைக்கிறது. எப்போதும் போல இந்த வருடமும் சில முக்கிய அணிகளே டாப் 5 இடத்தில் இருக்கிறது.

நல்ல பார்மில் இருந்த இலங்கை, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுக்கு மட்டும் இந்த வருடம் மிகவும் மோசமான வருடம் ஆகும். இந்தியா விஸ்வரூபம் எடுத்ததில் தொடங்கி ஆஷஸ் போட்டியில் நடக்கும் களேபரங்கள் வரை அனைத்தும் இந்த பட்டியலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

உலகிலேயே டி-20 போட்டியில் இப்போது சிறந்த அணி எது என்று கேட்டால் கூகுளை பார்க்காமல் பாகிஸ்தான் அணி என்று சொல்லிவிடலாம். இந்தியா எவ்வளவு முயன்றும் இந்த வருடம் டி-20 தரவரிசையில் பாகிஸ்தான் அணியை முந்த முடியவில்லை. முக்கியமாக எப்போதும் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போன்ற போட்டிகளில் இந்தியா எளிதாக பாகிஸ்தானை வீழ்த்திவிடும். ஆனால் இந்த வருட சாம்பியன்ஸ் கோப்பையில் பாகிஸ்தான் 338 ரன்கள் எடுத்து 180 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக கோப்பையை கைப்பற்றியது.

4 வது இடம்

4 வது இடம்

இந்த இடத்திற்கு நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் கடுமையாக போட்டியிட்டது என்று கூட சொல்லலாம். இரண்டு அணிகளுமே இந்த வருடம் சமமான அளவிற்கு போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஆனால் நியூசிலாந்து இந்திய அணியிடம் மட்டுமே மோசமாக தோற்றது. தற்போது இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது. அந்த வகையில் நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து அணியே சிறந்த தேர்வாகும். ஐசிசி தரவரிசையில் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 5 வது இடமும். டெஸ்டில் 4வது இடமும், டி-20ல் 2வது இடமும் பிடித்து இருக்கிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட வந்து மோசமாக வாங்கி கட்டிக்கொண்டு சென்றது. ஆனால் அந்த அவமானத்தை எல்லாம் மறைக்கும் வகையில் ஆஷஸ் தொடரில் தற்போது கெத்து விளையாட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறது. எப்படி இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் கடுமையான போட்டி இருக்கிறதோ அதேபோல் இந்திய கேப்டன் கோஹ்லிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த ஒருவருடம் மட்டும் ஆஸ்திரேலிய இதுவரை 52 ஒருநாள் போட்டிகள் விளையாடி இருக்கிறது.

தென்னாபிரிக்க அணி

தென்னாபிரிக்க அணி

இந்தியாவை போலவே தென்னாப்பிரிக்க அணிக்கும் இந்த வருடம் மிகவும் சிறப்பான வருடம் ஆகும். ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மிக மோசமாக தோற்று வெளியே சென்றது. தென்னாபிரிக்க அணியை பார்க்க பரிதாபமாக இருக்கிறது என்று கிரேன் ஸ்மித் பேட்டி அளிக்கும் நிலைக்கு போனது. ஆனால் சுதாரித்த தென்னாப்பிரிக்க அணி தற்போது ஐசிசி தரவரிசையில் ஒருநாள் அணியில் கெத்தாக முதல் இடம் வகிக்கிறது. மேலும் டெஸ்ட் போட்டியில் 2வது இடமும் வகிக்கிறது. இன்னும் இந்த அணி டி-20 போட்டிகளில் சாதிக்க நிறைய இருக்கிறது.

நம்பர் 1

நம்பர் 1

சந்தேகமே இல்லாமல் இந்திய அணிதான் இந்த பட்டியலில் முதல் இடம் என்று கூறலாம். கங்குலி போட்ட விதை டோணி காலத்தில் வளர்ந்து தற்போது கோஹ்லி காலத்தில் விருட்சமாக மாறியுள்ளது. தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று கூறுவது போல இந்திய தொட்டதெல்லாம் 'வின்' ஆனது. 56 ஒருநாள் போட்டியில் விளையாடி 37 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றது . 70 சதவிகித வெற்றியை இந்தியா இந்த வருடம் பதிவு செய்துள்ளது. மேலும் எந்த தொடரையும் இந்திய இந்த வருடம் தோற்கவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி மட்டும் இந்தியாவிற்கு திருஷ்டி பொட்டாக இருந்தது.

Story first published: Friday, December 29, 2017, 15:52 [IST]
Other articles published on Dec 29, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+