Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகையே மிரளவைத்த சிறந்த பவுலிங் ஸ்பெல்.. 25 வருடமாக எந்த பவுலரும் தொட முடியாத சமிந்தா வாஸ் சாதனை

மும்பை: இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் வீசிய ஒரு அசாத்திய ஸ்பெல் இன்றும் கிரிக்கெட் ரசிகர்களை மிரளவைக்கும் சாதனையாக உள்ளது. துல்லியமான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி மிரட்டிய அவர், கடந்த 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளி புதிய வரலாறு படைத்தார். அப்போது முதல் இப்போது வரை இந்த சிறந்த ஸ்பெல் சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது.

கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கையின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை வாரிக்குவித்தார். மொத்தம் 8 ஓவர்கள் வீசிய அவர், அதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசி வெறும் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நிலைகுலைய வைத்தார்.

Best ODI Spell of All Time Chaminda Vaas 8 for 19 is the Record-Breaking ODI Spell for 25 years

சமிந்தா வாஸின் இந்த அசாத்திய பந்துவீச்சால் ஜிம்பாப்வே அணி 15.4 ஓவர்களில் வெறும் 38 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் கேப்டன் ஸ்டூவர்ட் கார்லைல் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை எட்டினார். 5 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேறினர். மீதமுள்ள 2 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கைப்பற்றினார்.

தொடர்ந்து 39 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, வெறும் 4.2 ஓவர்களில் அதாவது 26 பந்துகளிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. மாரவன் அட்டபட்டு 16 பந்துகளில் 23 ரன்களும், கேப்டன் சனத் ஜெயசூர்யா 7 பந்துகளில் 13 ரன்களும் விளாசினர். அவிஷ்கா குணவர்தனே 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

"ஹர்திக் பாண்டியாவுக்குப் பின் உருப்படியா..".. கம்பீரின் தேர்வு முறையை விளாசிய பத்ரிநாத்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் ஒரு பந்துவீச்சாளர் பதிவு செய்த மிகச்சிறந்த பந்துவீச்சு சாதனையாக இது இன்றும் முதலிடத்தில் நீடிக்கிறது. சுமார் 25 ஆண்டுகள் கடந்தும் யாராலும் முறியடிக்க முடியாத இந்த இமாலய சாதனையை இலங்கை ஜாம்பவான் சமிந்தா வாஸ் இன்றும் தன் வசம் வைத்துள்ளார்.

Story first published: Saturday, September 12, 2026, 14:26 [IST]
Other articles published on Sep 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+