Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்னில்ல... ரெண்டில்ல... 73,500க்கும் மேல மறு ட்வீட்... 2020ல சாதனைக்கு உள்ளான தோனியோட ட்வீட்!

டெல்லி : இந்த ஆண்டில் அதிகமாக மறு ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் குறித்து ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ல் சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார் முன்னாள் கேப்டன் தோனி. அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் மோடிக்கு நன்றி தெரிவித்து தோனி செய்திருந்த ட்வீட்டே இந்த 2020ம் ஆண்டில் அதிகமாக மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.

முடங்கிய விளையாட்டுத்துறை

முடங்கிய விளையாட்டுத்துறை

இந்த ஆண்டின் துவக்கத்தில் விளையாட்டில் அதிகமான பரபரப்புகள் காணப்படவில்லை. காரணம் கொரோனா காரணமாக வீட்டில் முடங்கிய விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்கள். ஆனால் 8 மாதங்கள் காத்திருந்ததுபோல விளையாட்டுத்துறையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இந்த ஆண்டு தற்போது வரை காணப்படுகிறது.

ரசிகர்களுக்கு பேரிடி

ரசிகர்களுக்கு பேரிடி

இதில் முக்கியமான ஒன்று முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் ஓய்வு அறிவிப்புதான். கடந்த ஆண்டு உலக கோப்பை தோல்விக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொண்ட தோனி, மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது.

சமூக வலைதளங்களில் வைரல்

சமூக வலைதளங்களில் வைரல்

முன்னதாக தோனி நின்றால் அது ஒரு செய்தி, நடந்தால் ஒரு செய்தி என்று அவரை பாலோ செய்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள், இந்த அறிவிப்பிற்கு பிறகு மிகவும் அதிகமாக பாலோ செய்யத் துவங்கினர். அவர் குறித்த ஒவ்வொரு செய்தியும் சமூகவலைதளங்களில் வைரலானது.

ஏமாற்றம் என மோடி கடிதம்

ஏமாற்றம் என மோடி கடிதம்

முக்கியமாக தோனியின் ஓய்வு முடிவு மற்றும் அவரது சர்வதேச கிரிக்கெட் கேரியர் குறித்து பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி தோனிக்கு மிகப்பெரிய கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தோனியின் முடிவால் 130 கோடி இந்தியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

கேம் பினிஷிங் வித்தை சிறப்பான தோனி

கேம் பினிஷிங் வித்தை சிறப்பான தோனி

மேலும் தோனியின் கேம் பினிஷிங் வித்தை குறிப்பாக 2011 உலக கோப்பையில் அவரது ஆட்டம் எப்போதும் காலங்களை கடந்து ரசிகர்களின் மனதில் நிலைக் கொண்டிருக்கும் என்றும் ஒரு விளையாட்டு வீரராக மட்டுமின்றி உத்வேகம் அளிக்கும் நபராகவும் அவரது சிறப்பு போற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தோனி நன்றி

தோனி நன்றி

இதையடுத்து இந்த கடிதத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த தோனி, ஒவ்வொரு கலைஞன், ராணுவ வீரர் மற்றும் விளையாட்டு வீரர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாராட்டு மிகவும் முக்கியமானது என்றும் அவர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகம் கவனிக்கப்பட்டு பாராட்டப்படுவதை அவர்கள் விரும்புவார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் பிரதமரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

தோனியின் நன்றி ட்வீட்

தோனியின் நன்றி ட்வீட்

இந்த ட்வீட் அப்போது மிகவும் வைரலானது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டின் அதிகமாக மறு ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் இது என்று ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த 2020ம் ஆண்டில் இந்திய விளையாட்டுத்துறையில் இந்த ட்வீட் 73,500க்கும் மேல் மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Story first published: Tuesday, December 15, 2020, 13:38 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+