"ஏலியன்" ஓப்பனிங்.. இதுதான் தென் ஆப்பிரிக்காவின் "பிளான்"!
ஜோஹன்னஸ்பர்க்: இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டித் தொடரில் ஏப் டிவில்லியர்ஸ் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கவுள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டூபிளஸிஸ் கூறியுள்ளார்.
"ஏலியன்" என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் டிவில்லியர்ஸ். அதிரடிக்குப் பெயர் போனவர், அடிக்க ஆரம்பித்து விட்டால், அவரே நிறுத்தினால்தான் உண்டு.
அவரது அதகள பேட்டிங் சாகசங்களை உலக கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை காண ஆவலாக உள்ளனர்.. இந்தியாவில் நடைபெறவுள்ள டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில்.

டிவில்லியர்ஸ் ஓப்பனிங்
இந்த நிலையில் ஜோஹன்னஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் பாப் டூபிளஸிஸ் கூறுகையில் உலகக் கோப்பைத் தொடரில் டிவில்லியர்ஸ் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார்.

இந்தியாவுக்குப் பொருத்தமானவர் டிவில்லியர்ஸ்
இந்தியச் சூழலில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க டிவில்லியர்ஸ் பொருத்தமானவர். அவர் ஐபிஎல் போட்டிகளில் நடுக்கள ஆட்டக்காரராக களம் இறங்கி அசத்தியுள்ளார்.

அதிரடியாக ஆடுவார்
இந்திய மைதானங்களில் நல்ல அனுபவம் கொண்டுள்ள டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கிறோம். சதம் போடவும் அவரை வாழ்த்துகிறோம். பெரிய ஸ்கோரை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

இங்கு நடந்திருந்தால் கதையே வேறு
ஒரு வேளை உலகக் கோப்பைத் தொடர் இங்கோ அல்லது இங்கிலாந்திலோ நடந்திருந்தால் அது வேறு. ஆனால் இந்தியச் சூழலில் நடைபெறுவது, டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களுடன் இருக்கும் எங்களுக்கு சாதகமானதுதான் என்றார் அவர்.

பிரித்து மேய்ந்தார்
32 வயதாகும் டிவில்லியர்ஸ், நேற்று இங்கிலாந்துக்கு எதிரான 2வது டுவென்டி 20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி 29 பந்துகளில் 71 ரன்களைக் குவித்தார். 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றியும் பெற்றது.


Click it and Unblock the Notifications