Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய மண்ணில் விளாசப்பட்ட 10 பெஸ்ட் டெஸ்ட் செஞ்சுரிகள்.. சச்சின், லட்சுமணனுக்கும் இடம்!

சிட்னி: தங்கள் மண்ணில் விளாசப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் செஞ்சுரிகள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலில் சச்சன் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், சேவாக் ஆகியோரின் செஞ்சுரிகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே 15 முதல் 10 இடங்களுக்கான பட்டியலை ஆஸி. கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருந்தது. அதில் 13வது இடத்தை சேவாக் பிடித்திருந்தார். அவரது 195 ரன்களுக்காக அந்த கவுரவம் அளிக்கப்பட்டது.

முதல் இடம்

முதல் இடம்

இப்போது முதல் 10 இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது ஆஸி. வாரியம். அதில் முதல் இடம் மைக்கேல் கிளார்க்கிற்கு சென்றுள்ளது. 2012ல் சிட்னியில் இந்தியாவுக்கு எதிராக அவர் குவித்த 329 ரன் நாட்-அவுட் இந்த புகழை ஈட்டித் தந்துள்ளது. இதில் ஆஸி. அணி, இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

2வது இடம்

2வது இடம்

தென் ஆப்பிரிக்காவின் பாப் டுப்ளசிஸ் 2012ல், அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், அடித்த 110 ரன், இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. அப்போட்டி டிராவில் முடிந்தது.

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

2003ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸி. வீரர் ரிக்கி பாண்டிங் இந்தியாவுக்கு எதிராக விளாசிய 257 ரன்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அப்போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லாரா செஞ்சுரி

லாரா செஞ்சுரி

2005ல் ஆஸி.க்கு எதிராக அடிலெய்டு நகர போட்டியில், வெஸ்ட் இண்டீசின் பிரைன் லாரா விளாசிய 226 ரன்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது. ஆயினும், அப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.

மீண்டும் கிளார்க்

மீண்டும் கிளார்க்

5வது இடம் மீண்டும் கிளார்க்குக்கு சென்றுள்ளது. இந்தியாவுக்கு எதிராக அடிலெய்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த போட்டியில் 128 ரன்கள் எடுத்து அந்த அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்திருந்தார் கிளார்க்.

ஸ்டீவ் வாக் சதம்

ஸ்டீவ் வாக் சதம்

2002ல் சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை, இங்கிலாந்து 225 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. அதில் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் 102 ரன்கள் விளாசினார். அந்த செஞ்சுரி 6வது இடம் பிடித்துள்ளது.

டுமினி வெற்றி சதம்

டுமினி வெற்றி சதம்

2008ல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி.டுமினியின் 166 ரன்கள் உதவின. அந்த செஞ்சுரிக்கு 7வது இடம்.

டிராவில் முடித்த சச்சின்

டிராவில் முடித்த சச்சின்

2004 ஜனவரியில், சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் விளாசிய 241 நாட்-அவுட் ரன் 8வது சிறந்த செஞ்சுரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டி டிராவில் முடிந்தது.

மொத்த வித்தை இறக்கிய சச்சின்

மொத்த வித்தை இறக்கிய சச்சின்

ஆஸி. கேப்டன் ஸ்டீவ்வாக்கின் பிரிவு டெஸ்ட் போட்டியான அதில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 705 ரன்கள் குவித்தது. அதற்கு சச்சினின் இரட்டை சதம் காரணம். தொடர் முழுக்க சொதப்பி வந்த சச்சின் மொத்தமாக சேர்த்து, அந்த போட்டியில் அடித்தார். இதற்காக ஆப்-சைடில் வீசப்பட்ட பந்துகளை அடிக்காமலே தவிர்த்தார். அந்த தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

லட்சுமண் சதம் அடித்தும் தோல்வி

லட்சுமண் சதம் அடித்தும் தோல்வி

இப்பட்டியலில் 9வது இடம் வெரி, வெரி, ஸ்பெஷல் லட்சுமணன் என்று செல்லமாக அழைக்கப்படும் வி.வி.எஸ் லட்சுமணனுக்கு கிடைத்துள்ளது. 2000வது ஆண்டில் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் விளாசிய 167 ரன்களுக்காக இந்த கவுரவம். அப்போட்டியில் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

இந்த பட்டியலில் 10வது இடம் பிடித்துள்ளவர் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ். 2008ல் ஆஸி.க்கு எதிராக அவர் விளாசிய 106 ரன்கள் நாட்-அவுட் உதவியுடன், தென் ஆ்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, September 26, 2015, 11:53 [IST]
Other articles published on Sep 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+