Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நூற்றாண்டின் சிறந்த செஞ்சுரி.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லிஸ்டில் வீரேந்திர சேவாக் சதம்!

மெல்போர்ன்: இந்த நூற்றாண்டில், ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த செஞ்சுரிகளில் ஒன்றாக வீரேந்திர சேவாக்கின் 195 ரன் விளாசல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா (வாரியம்) இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, 21ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட 15 பெஸ்ட் செஞ்சுரிகளை தேர்வு செய்து வருகிறது. 2000வது ஆண்டு முதல் இப்போதுவரையிலான செஞ்சுரிகள் அதில் அடங்கும்.

'Best Test Tons in Australia since 2000': Virender Sehwag's 195 at 13th spot

முதல்கட்டமாக 15 முதல், 10 வரையிலான பெஸ்ட் செஞ்சுரி பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 13வது இடத்தை சேவாக்கின் 195 ரன் பெற்றுள்ளது.

டேவிட் வார்னர் நியூசிலாந்துக்கு எதிராக 2011ல் எடுத்த 123 ரன்கள் 15வது இடத்தை பிடித்துள்ளது.

சைமன் கேட்டிஸ் நியூசிலாந்துக்கு எதிராக 2008ல் விளாசிய 131 ரன்கள் 14வது இடத்தை பிடித்துள்ளது.

2003ல் வீரேந்திரசேவாக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் விளாசிய 195 ரன்கள் இப்பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளது.

ஹசிம் ஆம்லா 2012ல் எடுத்த 196 ரன்களும், குமார் சங்ககாரா, 2007ல் விளாசிய 192 ரன்களும், முறையே 12 மற்றும் 11வது இடங்களை பிடித்துள்ளன. ஏபிடிவில்லியர்ஸ் 2008ல் விளாசிய 106 ரன் 10வது இடத்தை பிடித்துள்ளது. இம்மூன்று செஞ்சுரிகளும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளாசப்பட்டவையாகும்.

முதல் 9 இடங்களுக்கான பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெட்லி, நாதன் பிராக்கன் மற்றும் ஸ்டூவர்ட் மெக்கில் போன்ற சிறந்த பவுலர்களுக்கு எதிராக சேவாக் 233 பந்துகளில் 5 சிக்சர், 25 பவுண்டரிகள் உதவியுடன் 195 ரன்கள் விளாசினார். சிக்சருடன் இரட்டை சதம் அடிக்க முயன்றபோது, பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து, சேவாக் அவுட் ஆனார்.

பிற பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் அப்போட்டியில் இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 22, 2015, 18:07 [IST]
Other articles published on Sep 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+