தோனி பேட்டிங் ஆர்டர் ரகசியத்தை லீக் செய்தது தான் காரணமா? பலிகடா ஆக்கப்படும் பங்கர்..?
Recommended Video
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இங்கிலாந்து உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சியான தோல்வியுடன் வெளியேறியது. அந்த தொடருடன் ரவி சாஸ்திரி தலைமையிலான பயிற்சியாளர்களின் பதவி காலமும் முடிவுக்கு வந்தது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அவர்களது பதவி காலம் நீட்டிக்கப்பட்டு, தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங், பவுலிங் பயிற்சியாளர் உட்பட 7 பதவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டார்.

புதியதாக தேர்வு
தொடர்ந்து பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கருக்கு பதிலாக விக்ரம் ரதோர் புதியதாக தேர்வு செய்யப்பட்டார்.

எழுந்தது கேள்வி
அதன் பின், இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் பணியாற்றி வந்தார். ஆனால் அவர் பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாததை தொடர்ந்து உதவி பயிற்சியாளராக யார் இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பரத் அருணுக்கு வாய்ப்பு
இந்நிலையில் அந்த பொறுப்பில் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் நியமிக்கப் படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவுலிங் பயிற்சியாளராக ஆன பிறகு அணியில் பாராட்டத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளதால் அவர் உதவி பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியானவராக இருப்பார் என்று கருதப்படுகிறது.

கடும் அதிருப்தி
மேலும் உலக கோப்பையில் தோனியின் பேட்டிங் ஆர்டர் விவகாரத்தை வெளியில் சொன்னதால் அவர் மீது பிசிசிஐ தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக தெரிகிறது. அதன் காரணமாகவும் இந்த முடிவுக்கு பிசிசிஐ தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு?
பிசிசிஐ தலைமை அதிகாரி ராகுல் ஜோக்ரி இந்தியா வந்தவுடன், அவருடன் ஆலோசித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், உலக கோப்பை தோல்வியின் தாக்கம், மேலும் பல மாதங்கள் வரை நீடிக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications