Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா என்ற பெயரை சொந்தம் கொண்டாடும் பாகிஸ்தான்.. கிரிக்கெட்டில் பாரத் vs இந்தியா என மாறும் அபாயம்

லாகூர்: இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் அரசியல் சாசனத்தில் இந்தியா அதாவது பாரத் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் பாரத் என்ற பெயரையே அதிகாரப்பூர்வமாக வைத்துக் கொள்வோம் என்றும் இந்தியா என்ற பெயர் வேண்டாம் என்றும் ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர்.

Bharat name change issue - Now Pakistan asking for the name india

மறு தரப்பினர் இந்தியா என்ற பெயர் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இருதரப்பினரையும் அதிர்ச்சி அடையும் அளவுக்கு பாகிஸ்தான் ஒரு வேலையை செய்திருக்கிறது. அதாவது இந்து சமவெளி பகுதியில் வாழும் நபர்கள் என்பதை தான் இந்தியா என்ற சொல் குறிக்கிறது. இந்த இந்து சமவெளி என்பது பாகிஸ்தானில் இருந்து தான் தொடங்குகிறது.

இதனால் இந்தியா என்ற பெயரை பாகிஸ்தானும் காலம் காலமாக தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டு வந்திருக்கிறது. ஆனால் இந்தியா என்ற பெயர் நமக்கும் பாகிஸ்தான் என்ற பெயர் பக்கத்து நாட்டினருக்கும் கிடைத்துவிட்டது. இந்த நிலையில் இந்தியா தங்களுக்கு இந்த பெயர் வேண்டாம் என்று மாற்றிக் கொண்டால் இனி அந்த பெயரை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் என பாகிஸ்தான் திடீரென்று ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறது

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை இந்தியா பாரத் என தங்களது பெயரை மாற்றிக் கொண்டால்,பின் பாகிஸ்தான் இந்தியா என்று தங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. அப்படி ஒரு வேலை நடந்து விட்டால் கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் இந்தியாவாகவும் நடக்கும் போட்டி இந்தியா பாரத் என்று மாறிவிடும்.

இந்தியா- பாகிஸ்தான்! இந்தியா பாகிஸ்தான் ! என்று சொல்லி சொல்லி பழகிய நமக்கு இந்தியா பாரத் என்று பார்த்தால் நமது நெஞ்சம் ஒற்றுக்கொள்ளுமா? நமது பெயரை வேறு நாட்டுக்கு வைப்பது சரியாகுமா என பலரும் தற்போது தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, September 6, 2023, 17:04 [IST]
Other articles published on Sep 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+