Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் டெண்டுல்கர், கேப்டன் டோணிக்கு கோவில் கட்டும் நடிகர் மனோஜ் திவாரி

Sachin and Dhoni
பாபுவா: போஜ்பூரி நடிகர் மனோஜ் திவாரி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேப்டன் டோணி ஆகியோருக்கு கோவில் கட்டப் போவதாக கூறியுள்ளார்.

இந்தக் கோவில் பீகாரில் உருவாகவுள்ளது. பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான அதர்வாலியா என்ற கிராமத்தில் இக்கோவிலை கட்டவுள்ளதாக திவாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ரூ.3 கோடி செலவில் இக்கோவில் கட்டப்படும். இந்தக் கோவிலின் முதன்மைக் கடவுளாக சச்சின் விளங்குவார். அதேபோல டோணிக்கும் இங்கு சிலை வைக்கப்படும்.

இந்த இரு வீரர்களும் இந்திய கிரிக்கெட்டின் கடவுள்கள் ஆவர். இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய சேவை செய்துள்ளனர்.

இந்தக் கோவிலில் சச்சின், டோணியின் சிலைகள் தவிர கோவிலின் சுவற்றில் 2011ல் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் படமும் ஓவியமாக தீட்டப்படும்.

இந்த கோவிலுக்கு அருகே உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டவும் தீர்மானித்துள்ளேன். இதன் மூலம் பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் இங்கு பயிற்சி எடுக்க வசதியாக இருக்கும் என்றார் திவாரி.
Story first published: Friday, June 1, 2012, 16:01 [IST]
Other articles published on Jun 1, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+