புஸ்ஸென்று போன புவனேஷ்வர் குமார்.. நாடு திரும்புகிறார்
Recommended Video

புவனேஸ்வர் ஏன் காயத்தோடு விளையாடினார்?...வீடியோ
லண்டன்: இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்புகிறார்.
முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் ஆடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்றார்.

அதன் பின்னர் அறிவிக்கப்பட்ட டெஸ்ட் போட்டிக்கான 18 பேர் கொண்ட அணியில் அவர் இடம் பெறவில்லை. காயத்தின் தன்மை குறித்து உறுதி ஆன பின்னர் அவர் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் இன்று நாடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா முதல் போட்டியில் இடம் பெறாத நிலையில் புவனேஸ்வர் குமாரும் இடம் பெறாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாகும்.
இந்திய அணி கடந்த முறை இங்கிலாந்து சுற்றுபயணத்தின்போது வேக பந்துவீச்சாளர்களே அதிக விக்கெட்களை வீழ்த்தினர். குறிப்பாக அதிகப்படியான விக்கெட்களை புவனேஸ்வர் குமார் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, July 19, 2018, 16:09 [IST]
Other articles published on Jul 19, 2018


Click it and Unblock the Notifications